மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ளது கண்ணனூர் கிராமம் இந்த கிராமத்திற்கு அருகில் உள்ள கலுங்குப்பட்டியில் 80 அடி ஆழ கிணற்றில் நாய் ஒன்று இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. இந்த நிலையில் இறந்து கிடந்த நாயை அப்புறப்படுத்துவதற்காக விருமாண்டி என்பவர் கிணற்றுக்குள் இறங்கினார்.
அப்போது, விருமாண்டியின் கால் இடறி 80 அடி ஆள கிணற்றுக்குள் விழுந்து மேலே வர முடியாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற ரவிநிவாஸ், மாயன்
விருமாண்டி என்ற வெள்ளத்துரை ஆகியோர் விருமாண்டியை மீட்பதற்காக கிணற்றுக்குள் இறங்கினர்.

இந்த நிலையில், அவர்களும் தவறி 80அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்தனர். மூன்று நபர்களும் கிணற்றிற்குள் இருந்து மேலே வர முடியாமல் தவித்தனர். இதனை அறிந்த கிராம மக்கள் சோழவந்தான் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சோழவந்தான் தீயணைப்பு நிலைய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கிணற்றுக்குள் தொட்டில் கயிறு கட்டி கிணற்றிற்குள் இருந்த மூன்று நபர்களையும் பத்திரமாக மீட்டனர்.

பின்னர் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த நாயை மீட்க சென்ற நபர் கிணற்றுக்குள்விழுந்த நிலையில் அவரை காப்பாற்ற சென்ற நண்பர்களும் கிணற்றுக்குள் விழுந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்திகள் ; காளமேகம் எதிரொலி / 8939476777
