தேசிய குலாளர் சங்கம், தமிழ்நாடு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எம்.ஐயப்பன், திருநெல்வேலியில் தமிழக சபாநாயகர் மு.அப்பாவு விடம் நேரில் கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: மண்பாண்ட தொழிலாளர்கள் மழைக்கால நிவாரணம் பெறுவது மற்றும் வண்டல் மண் எடுப்பதில் உள்ள குளறுபடிகள் குறித்து தமிழக சட்டமன்றத்தில் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ராஜ கண்ணப்பன், மண்பாண்ட தொழிலாளர் நல வாரிய அட்டை வைத்திருப்பவர்களுக்கு உடனடியாக நிவாரண தொகை வழங்கப்படுவதாகவும், மண்பாண்டம் தயாரிப்பதற்கு வண்டல் மண் எடுக்க மனு அளித்தால் உடனடியாக அனுமதி வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். இது உண்மைக்கு புறம்பான தகவல் ஆகும். 2025 – 26 ம் ஆண்டிற்கான மழைக்கால நிவாரண தொகை இன்று வரை பெரும்பாலான தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை.

தமிழகத்தில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதிவு பெற்ற மண்பாண்ட தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களில் 9 ஆயிரம் பேருக்கு மட்டுமே மழைக்கால நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மண்பாண்ட தொழிலாளர்கள் குறித்து சட்டமன்றத்தில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் தவறான தகவல்களை தெரிவித்தது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. எனவே, சட்டமன்றத்தில் அமைச்சர் தெரிவித்தது போன்று 2025. 2026 ஆம் ஆண்டிற்கான மழைக்கால நிவாரணத் தொகையை தாமதம் இன்றி ஒரு வார காலத்திற்குள் வழங்க கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் சட்டமன்றத்தில் அமைச்சர் உறுதி அளித்தபடி மண்பாண்டத் தொழில் செய்வதற்கு வண்டல் மண் எடுப்பதற்கான நடைமுறை சிக்கலை தீர்க்க வேண்டும். மேலும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மழைக்கால நிவாரணதொகை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரம் ஆக உயர்த்தி தர வேண்டுகிறோம். இவ்வாறு தேசிய குலாலர் சங்கம், தமிழ்நாடு சங்கத்தின் மாநில பொது செயலாளர் எம்.ஐயப்பன், சபாநாயகரிடம் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார். அப்போது சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார், மாநில அமைப்பு செயலாளர் சண்முகராஜ், கன்னியாகுமரி மாவட்ட தலைவர் ஏ.நடராஜன், இளைஞரணி தலைவர் ஏ.முகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

நெல்லை செய்தியாளர்:
செ.பா.தவசிக்கனி
/ 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *