மதுரை மாவட்டம்
சோழவந்தான் அடுத்து காடுபட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட
மேலக்கால் அருகே 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் காடுபட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மயங்கி கிடந்தவரை ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளார்.
இறந்தவர் பற்றிய விவரங்கள் குறித்து காடுபட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பகுதியில் காணாமல் போனவர்கள் பற்றிய தகவல் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்க கேட்டுக் கொண்டுள்ளனர்.
செய்திகள் : காளமேகம் / எதிரொலி. இன் / 8939476777
