தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து இந்து கோயில்களையும், கோயில் சொத்துக்களையும் பாதுகாக்கவும் பராமரிக்கவும், இந்து சமயத்திற்கு சிறிதும் சம்பந்தமில்லாத ஆங்கிலேயர் காலத்திலேயே , சைவமும், வைணவம், உட்பட ஆறு சமயங்களை ஒன்றிணைத்து, இந்து சமயம் என ஒரு புதிய சமயத்தை உருவாக்கினர். மேலும், 1917 ம் ஆண்டிலேயே, “மெட்ராஸ் ரெகுலேஷன் சட்டம்” மூலம், கோயில்களின் நிர்வாகத்தை, தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆங்கிலேயர்கள் நிர்வாகம் செய்தனர்.
அதன் பிறகு, ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் ஆட்சி செய்த நீதிக்கட்சியின் ஆட்சியின் போது, 1927 ம் ஆண்டில், “இந்து சமய அறநிலைய வாரியம்” உருவாக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.

இப்படி, இந்து சமயத்திற்கு சிறிதும் சம்பந்தமில்லாத ஆங்கிலேயர்களும், ஜாதி மதங்கள் கடந்து செயல்பட்ட நீதி கட்சி ஆட்சியிலும், கடவுள் மறுப்பு கொள்கையை அடிப்படையாக கொண்ட திராவிட கொள்கையின்படி, ஆட்சி செய்த திராவிட கட்சிகளின் ஆட்சியிலும், இந்து சமயத்தின் கோயில்களையும், கோயில் சொத்துக்களையும், பாதுகாக்கவும், பராமரிக்கவும் அமைப்புகள் உருவாக்கப்பட்டு அவைகள் படிப்படியாக, பெயர் மாற்றம், நிர்வாக மாற்றமாக மாறி இருந்தாலும், தற்போது “இந்து சமய அறநிலையத்துறை” என செயல்பட்டு கொண்டு உள்ளது.

கடவுள் மறுப்புக்கு கொள்கையை அடிப்படையாக கொண்ட திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கோயில்கள் மிகவும் சிறப்பாக பராமரிக்கப்பட்டு பல்லாயிரம் கோடி செலவு செய்து கும்பாபிஷேகங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும், கோயில் சொத்துக்கள் பராமரிக்கப்பட்டும் அதன் மூலம் பல விதங்களில் நலத்திட்ட உதவிகளும், பல வழிகளில் சிறப்பாக செயல்படுத்தி கொண்டிருக்க கூடிய சூழலில்,

தமிழ்நாட்டு பாஜக கட்சியின் சார்பில், தற்போது “தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இந்து சமய அறநிலைத்துறையை கலைத்துவிட்டு, கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களையும், விளைநிலங்களையும், கோயில்களையும் அந்தந்த ஊரில் இருக்கக்கூடிய முக்கியஸ்தர்களே நிர்வகிக்க வேண்டும்” என கோரிக்கையை முன் வைத்து வருகின்றனர். மேலும், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலைத்துறையை கலைத்து விடுவோம்” என்று உறுதியாக கூறியும் வருகின்றனர். இவர்களுடைய இந்த கோரிக்கைக்கு காரணம், தமிழ்நாட்டை கடந்த 200 ஆண்டுகளுக்கு பின்னோக்கி அழைத்து செல்ல வேண்டும் என இவர்கள் ஆசைப்படுவது தான்,

அவர்களுடைய ஆசையை நிறைவேற்றும் வகையில், பாஜக தமிழ்நாட்டில் ஆட்சி செய்யாவிட்டாலும், ஆட்சியாளர்கள் யார் இருந்தாலும் அவர்களை தங்களுடைய கைப்பாவைகளாக வைத்து கொண்டு இவர்களுடைய ஆசைகளை நிறைவேற்றி கொண்டுதான் வருகிறார்கள். இதற்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால்,

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகா அனுப்பம்பட்டு கிராமத்தில் உள்ள அருள்மிகு முத்தாலம்மன் கோயிலுக்கு சொந்தமான விளைநிலங்களை பயன்படுத்தி விவசாயம் செய்து வரும், அனுப்பம்பட்டு அடுத்துள்ள ஜோதி நகர் பகுதியை சேர்ந்த, பாஜக தேசிய பொறுப்பாளரான ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன் அவர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக, அவர் பயன்படுத்தும் கோயில் நிலத்திற்கு குத்தகை வழங்கப்படவில்லை என, அப்பகுதி மக்களால் பல ஆண்டுகளாக இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டு வந்தது.

ஆனால், அதை எதையும் காதில் வாங்கி கொள்ளாத இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன் அவர்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்தனர்.

இந்நிலையில், அனுப்பம்பட்டு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் கடந்த 2023 ம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக “முத்தாலம்மன் கோயிலுக்கு சொந்தமான விளைநிலங்களுக்கு குத்தகை வசூலிக்க வேண்டும். எனவும், அந்த விளைநிலத்தை மீண்டும் குத்தகை ஏலம் விட வேண்டும்” எனவும் கோரிக்கை வைத்திருந்தார். அதற்கு பதில் அளித்த அறநிலைத்துறை அதிகாரிகள், “அந்த விளைநிலத்தை யாருக்கும் குத்தகைக்கு இதுவரை விடவில்லை எனவும், “ஆர் எம் ஆர் ஜானகிராமன் அவர்கள் அந்த கோயில் நிலத்தை இந்து சமய அறநிலைத்துறையிடம் அனுமதி எதுவும் இல்லாமல், ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வருகிறார்.” எனவும், கூடிய விரைவில் இந்த இடத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு மறு ஏலம் விடப்படும் எனவும், தகவல் வழங்கினர்.

அதன்படி, அந்த ஆக்கிரமிப்பாளர் ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன் அவர்களுக்கு இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், “இந்த விளைநிலத்தை நீங்கள் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால், சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் ” என முன்னெச்சரிக்கை நோட்டீஸும் வழங்கினர். மேலும், அதேபோல் அந்த சம்பந்தப்பட்ட இடத்தில், ” இந்த இடத்தில் யாரும் அத்துமீறி நுழைய கூடாது, ஆக்கிரமிப்பும் செய்யக்கூடாது” எனவும், அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.

ஆனால், அதை எதையும் தனது காதில் வாங்கி கொள்ளாத, ஆர் எம் ஆர் ஜானகிராமன் அவர்கள் அந்த கோயில் நிலத்தை இன்று வரை தொடர்ந்து விவசாயம் செய்து கொண்டுதான் இருக்கிறார். மேலும், அந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகையையும் சேதப்படுத்தி அகற்றி உள்ளனர்.

இது குறித்து, அந்த கோயிலின் அறங்காவலர் ராஜேந்திரன் அவர்களிடம் பாலகிருஷ்ணன் நேரடியாக சந்தித்து, அறிவிப்பு பலகை அகற்றப்பட்டுள்ளது குறித்து முறையிட்ட போது, “நான் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் கொடுத்திருக்கிறேன்.” எனவும், “அவர்கள் போலீசில் புகார் செய்வதாகவும் சொல்லி இருக்கிறார்கள்” எனவும் கூறினார். “அப்படி அவர்கள் புகார் அளிக்காவிட்டால், நானே காவல் நிலையத்தில் புகார் செய்கிறேன் ” என உறுதி அளித்தார்.

ஆனால், இரண்டு, மூன்று மாதங்கள் கழித்தும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் அறங்காவலர் எடுக்காததால், மீண்டும் அதே பிரச்சினை குறித்து முறையிட்டபோது, அறங்காவலர் ராஜேந்திரன் முன்னுக்கு பின் முரண்பாடாக, ” அந்த அறிவிப்பு பலகை தானாகவே சேதம் அடைந்து விட்டது ” எனவும், “இது குறித்து போலீசில் புகார் செய்வது அவசியமில்லை” எனவும் கூறினார்.

ஆகவே, பாலகிருஷ்ணன் மீண்டும் இந்து சமய அறநிலைத்துறை ஆணையரிடம், முத்தாலம்மன் கோயில் நிலத்தை தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்து வரக்கூடிய, ஆர் எம் ஆர் ஜானகிராமன் அவர்களுக்கு உடந்தையாக இருக்கக்கூடிய, அறநிலைத்துறை அதிகாரிகள் மீதும், கோயில் அறங்காவலர் ராஜேந்திரன் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் ” என புகார் செய்துள்ளார்.

கடவுள் மறுப்பு கொள்கையை பிரதானமாகக் கொண்ட திராவிட கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆட்சிக்காலத்திலும், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கோயில் நிலங்கள் பாதுகாக்கப்பட்டு வந்தது. அனைத்து கோயில்களும் பல்லாயிரம் கோடி செலவு செய்து கும்பாபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன.

ஆனால், திமுக ஆட்சியில் அறநிலைய துறை அமைச்சராக இருந்த சேகர்பாபு அவர்களும், இந்து சமய அறநிலை துறை அதிகாரிகளும், பாஜகவின் கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு கோயில் சொத்துக்களை பாதுகாப்பதில் பல தவறுகளை செய்து இருக்கிறார்கள்.

ஆனால், சென்ற ஆட்சியாளர்கள் செய்த தவறுகளை எல்லாம் நாங்கள் செய்யமாட்டோம் எனவும், அப்படி செய்தவர்களை விட்டு விடவும்மாட்டோம் எனவும், தொடர்ந்து தமிழக மக்களுக்கு நம்பிக்கை வழங்கி வரக்கூடிய தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள், இவருடைய இந்த ஆட்சியிலும், இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் அனைவரும் பாஜகவின் கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு, அவர்கள் (பாஜகவினர்) தேவைகளை நிறைவேற்றி கொடுக்கின்றனர் என்பதுதான், வேதனையாக உள்ளது.

செய்திகள் ; சந்திரகுமார் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed