ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் ஆயுதப்படை மைதான வளாகத்தில், மாவட்ட நிர்வாகம் , தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்திய போதைப் பொருள் பழக்கத்திற்கு எதிரான மாபெரும் விழிப்புணர்வு மாரத்தான் பேரணியை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பச்சை கொடியசைத்து துவக்கி வைத்து, மாரத்தான் பேரணியில் பங்கேற்றார்.
நிகழ்ச்சிக்கு , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் , மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு அரசின் " போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு " என்ற உயரிய இலக்கினை வலியுறுத்தும் வகையில், மாவட்ட நிர்வாகம் , தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் "ஸ்டார்ட் ரன், ஸ்டாப் டிரக்ஸ் " ஆண்டி பிரக் ரன் 2026 என்ற மாபெரும் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.
காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் இருந்து தொடங்கிய இந்த மாரத்தான் விழிப்புணர்வு பேரணியானது பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், ரோமன் சர்ச் வழியாக சென்று மதுரை ரோடு, இராஜா பள்ளி விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது.
சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற மாரத்தான் பேரணியில் 14 வயதுக்கு மேற்பட்ட மாணவர், மாணவியர்கள் இளைஞர்கள் என்சிசி , என்எஸ்எஸ் , என்ஓய்கே விளையாட்டு வீரர், வீராங்கனைகள், அரசு ஊழியர்கள் , பொதுமக்கள் என சுமார் 3000 பேர் பங்கேற்றனர்.
முன்னதாக , ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் ஆயுதப்படை மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த " போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு " என்ற விழிப்புணர்வு பதாகையில் கையொப்பமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து , ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் மாணவர் , மாணவியர்கள் , அரசு அலுவலர்கள் , பொதுமக்கள் , விளையாட்டு வீரர், வீராங்கனைகள் உள்ளிட்டோர் போதைப் பொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.


பின்னர் , ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பேசியதாவது :
போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தும் வகையில், கடந்த 15 நாட்களாக மாவட்டம் முழுவதும் பள்ளிகளில் கட்டுரைப் போட்டிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் , ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் தினந்தோறும் சுமார் 1,17,000 மாணவர், மாணவியர்கள் காலையில் முதல் நிகழ்வாக போதைப் பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க உறுதிமொழி ஏற்று வருகின்றனர் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்.ரெஜினி , மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் , ஊராட்சிகள் உதலி இயக்குநர் பத்மநாபன் , ராமநாதபுரம் நகராட்சி ஆணையர் அஜிதாபர்வின் , ஆயத்தீர்வை உதவி ஆணையர் கங்காதேவி , நகர்நல அலுவலர் மரு.இரத்தினக்குமார் , வட்டாட்சியர்கள் ஜமால் முகம்மது , ஸ்ரீதர் , காளீஸ்வரன் , ராமசுப்பு , செய்தி – மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் சாலி தளபதி , உதவி அலுவலர் விஜயகுமார் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர் / எதிரொலி/ 8939476777
