கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட மணவாரனப்பள்ளி கிராமத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், பெண் குழந்தைகளுக்கான சிறப்பு கிராம சபை விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

மாவட்ட சமூக நல அலுவலர் சக்தி சுபாஷினி அவர்களின் ஏற்பாட்டில் நடைப்பெற்ற இந்த விழிப்புணர்வு கூட்டத்தின் போது குழந்தைகளின் உரிமைகள் குறித்தும், பெண் கல்வியின் முக்கியதுவம் குறித்தும், குழந்தைத் திருமணங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமணம் மற்றும் மருத்துவம், சுகாதாரம் ஆகிய தலைப்புகளில் விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்.

மேலும், இந்த விழிப்புணர்வு நிகழ்சியில் மணவார்னபள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து கலந்துகொண்டு பெண் குழந்தை பாதுகாப்பு குறித்த உறுதி மொழியும் எடுத்துக் கொண்ட 30 மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வு முகாமில், கிராமிய பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்ராஜா, பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் வீரமணி, ஆறுமுகம், வழக்கறிஞர் துளசி, மருத்துவர் விஜயலட்சுமி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மேற்பார்வையாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

செய்திகள் ; மாருதி மனோ எதிரொலி /. 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *