பொதுமக்கள் பாதுகாப்பாகவும், இடையூறு இல்லாமலும் நடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சாலையோர நடைபாதைகள் மற்றும் பொது இடங்களை கடைகள், வணிகப் பொருட்கள், தற்காலிக அமைப்புகள், வாகனங்கள் அல்லது வேறு எந்த வகையிலும் ஆக்கிரமிப்பது சட்டவிரோதமான செயலாகும்.

உடனடியாக , ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மாவட்ட காவல்துறை அறிவிப்பு கொடுக்கப்பட்டிருந்தது இந்நிலையில் இன்று நடைபாதைகளில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் மோட்டார் வாகன சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும், கடைகளில் நடைபாதையில் வைத்திருந்த விளம்பர பதாகைகளும் அப்புறப்படுத்தப்பட்டது.
பொதுமக்களின் நலன், சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீர்மையை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட உள்ளன.
பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் அனைவரும் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
