வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கார்த்திகேயபுரம் அருகே, அன்று மாலை 4. 50, மணி அளவில் ரங்கசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் (வயது 57, தகப்பனார் பெயர் சின்னசாமி) என்பவரும், சதாம் (வயது 26) என்பவரும், ஆம்பூர் குடியாத்தம் சாலை கார்த்திகேயபுரம் அருகே, இருசக்கர வாகனத்தில் நேருக்கு நேர் மோதி கொண்டனர்.
அதில், செல்வம் என்பவருக்கு தலையில் பழுத்த காயம் ஏற்பட்டதால் குடியாத்தம் தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததார். மர சதாம் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.
செல்வம் என்பவர் மாற்றுத்திறனாளி எனவும், இவருக்கு குப்பம்மாள் என்ற மனைவியும், ராஜேஷ் என்ற மகனும் உள்ளனர். என்று தெரியவந்தது, அவருடைய உடல் கூறுகாக பிரேத பரிசோதனைக்கு குடியாத்தம் தலைமை பொது அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் குடியாத்தம் கிராமிய காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் செய்தியாளர் ; மூர்த்தி எதிரொலி /. 8939476777
