ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பள்ளிக் கல்வித் துறை மூலம் கண்காணிப்பு அலுவலர்கள் தலைமை ஆசிரியர்களுக்கான மீளாய்வுக் கூட்டம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா. சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் , ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்ததாவது :
கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு முடித்த அனைத்து மாணவர்களையும் 100% சதவீதம் உயர் கல்வி சேருவதை உறுதிசெய்ய வேண்டும் . குறிப்பாக பெற்றோர் இல்லாதவர்கள், பொருளாதார ரீதியாக உயர் கல்வியை தொடர முடியாத நிலையில் உள்ள மாணவர் - மாணவியர்கள் குறித்து தகவல் தெரிவித்தால், அவர்களுக்கு தன்னார்வலர்கள் , நன்கொடையாளர்கள் மூலம் உயர் கல்வியை தொடர்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
மேலும் , பள்ளிகளுக்கு மாணவர், மாணவியர்கள் சென்று வர தேவையான பேருந்து வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து தொடர்புடைய கண்காணிப்பு அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
மேலும் , பள்ளியில் பழுதாகியுள்ள கட்டடங்களின் நிலை குறித்து அவ்வப்போது கண்காணித்து அலுவலர்களிடம் அனுமதி பெற்று அவற்றை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் மாணவர், மாணவியர்கள் விருப்பமுடனும், ஆர்வமுடனும் கல்வி பயில ஏதுவாக இருக்கும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார்.

கூட்டத்தில் , மாவட்ட வருவாய் அலுவலர் வ. சங்கரநாராயணன் , வளர்ச்சி கூடுதல் ஆட்சியர் திவ்யான்ஷிநிகம் நெடுஞ்சாலை மாவட்ட வருவாய் அலுவலர் புகாரி , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல். ரெஜினி , ஊராட்சிகள் உதவி இயக்குநர் பத்மநாபன் , மாவட்ட கல்வி அலுவலர்கள், உதவி திட்ட அலுவலர்கள் , தலைமையாசிரிய பெருமக்கள், செய்தி – மக்கள் தொடர்பு மாவட்ட உதவி அலுவலர் நா.விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாமுஜெயக்குமார்,
மாவட்ட செய்தியாளர்
