கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம், பில்லனகுப்பம் ஊராட்சியில், இந்தியன் வங்கி சார்பாக, ரூ.3 கோடியே 92 இலட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ள ஊரக வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவன கட்டிடத்திற்கான கல்வெட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் இன்று (17.06.2026) திறந்து வைத்தார்.

உடன், இந்தியன் வங்கி களப் பொதுமேலாளர் (கோயம்புத்தூர்) எம்.செல்வராஜ், இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குநர் பிரசாந்த் (பெங்களூர்), இந்திய ஊரக சுய வேலைவாய்ப்பு இயக்குநர் வெங்கடேசன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பெரியசாமி, இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளர் சசிகுமார் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
செய்திகள் ; மாருதி மனோ எதிரொலி / 8939476777
