திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு பகுதியில் சுமார் 50,000க்கும் மேற்பட்ட மீனவ மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் ஒரே மீன்பிடி ஆதாரமாக திகழும் முகத்துவாரம் ஆண்டுதோறும் அடைப்பட்டு வருகிறது. இதற்காக நீண்ட கால திட்டமாக 27 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு அமைக்கும் பணி கடந்த ஆண்டு முடிவடைந்தது. இருப்பினும் இத்திட்டம் தோல்வியடைந்ததால் இந்த ஆண்டு மீண்டும் வழக்கம்போல் முகத்துவாரம் அடைபடும் சூழல் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா,திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில்,பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ரவி ஆகியோர் அடைபட்ட முகத்துவாரத்தை பார்வையிடுவதற்காக பழவேற்காடு மீன் மார்க்கெட் பகுதியில் இருந்து படகுமூலம் முகத்துவாரம் பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மீண்டும் அடைப்பட்ட முகத்துவாரத்தை மீனவ படகுகள் சென்று வருவதற்கு ஏற்றார் போல் எவ்வாறு பணியை மேற்கொள்வது, ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவு திட்டத்தினையும் ஆய்வு செய்தனர்.இதில் பொன்னேரி சாராட்சியர் அப்துல் ராசிக், மீன்வளத்துறை உதவி இயக்குனர் அஜய் ஆனந்த், பொன்னேரி வட்டாட்சியர் சோமசுந்தரம், பொதுப்பணித்துறை உதவி கோட்ட அலுவலர், மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் அஸ்வின், மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர், திருப்பாலைவனம் காவல்துறை ஆய்வாளர் அகிலன் ராஜ், உதவி ஆய்வாளர் மனோவா செபாஸ்டின், தமிழ்நாடு கடலோர காவல் படை உதவி ஆய்வாளர் சபாபதி, பழவேற்காடு வனத்துறை அலுவலர் செந்தில்குமார் வருவாய் ஆய்வாளர் பிரேம்நாத், கிராம நிர்வாக அலுவலர் ராஜா, காங்கிரஸ் நிர்வாகிகள் சிவகுமார், ஏ.ஜி சிதம்பரம், சாய் சரவணன் உள்ளிட்டோர் ஆய்வின் பது உடன் இருந்தனர்.
செய்திகள் ; பழவை முத்து எதிரொலி / 8939476777
