நாகர்கோவில் பாஸ்டர் ஜஸ்டின் மோசஸ் முன்னிலையில், ஷக்கினா கல்லூரி முதல்வர் டாக்டர் ஜேம்ஸ் பட்டங்கள் வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்ட முதன்மைச் செய்தியாளர் செ.பா.தவசிக்கனி’ உள்ளிட்ட 36 மாணவ, மாணவிகள் “இறையியல் பட்டங்கள்” பெற்றனர்!

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் முறம்பு பகுதியில் செயல்பட்டு வரும் ஷக்கினா இறையியல் பயிற்சி மையத்தின் 25 ஆவது பட்டமளிப்புப் பெருவிழா ஷக்கினா எழுப்புதல் ஊழியத்தின் தலைமை ஆலயத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஷக்கினா எழுப்புதல் ஊழியத்தின் தலைமைப் போதகரும், ஷக்கினா இறையியல் பயிற்சி மையத்தின் முதல்வருமான அருள்திரு டாக்டர் ஏ.ஜேம்ஸ், தலைமை தாங்கி ‘உள்ளாட்சி சாரல் நாளிதழின் திருநெல்வேலி மாவட்ட முதன்மைச் செய்தியாளர் செ.பா.தவசிக்கனி’ உள்ளிட்ட 36 மாணவ, மாணவிகளுக்கு “இறையியல் பட்டங்கள்” வழங்கினார்.

ஷக்கினா இறையியல் பயிற்சி மையத்தின் பதிவாளர் ஆனி ஜேம்ஸ், டீன் பாஸ்டர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சபை விசுவாசி ஜெனிபா டேனியல் வரவேற்றார்.
நாகர்கோவில் பெராக்கா சுவிசேஷ ஊழியத்தின் போதகர் அருள்திரு ஜஸ்டின் மோசஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, ‘இறையியல் பட்டம் பெற்றவர்கள் ஊழியம் செய்ய வேண்டியதின் அவசியத்தையும், எப்படி எல்லாம் ஊழியம் செய்யலாம் என்பதை குறித்தும், தேவஊழியம் செய்வதினால் நாம் பெறும் ஆசீர்வாதங்களைக் குறித்தும்’ எடுத்துக் கூறினார்.

விருதுநகர் மாவட்டம் சூலக்கரையில் உள்ள பூரண சுவிசேஷ பெந்தேகோஸ்தே சபையின் போதகர் பாஸ்டர் அருள் சாமுவேல் பாடல் ஆராதனையை நடத்தினார். இறையியல் பயிற்சி மாணவர்கள் தேவராஜ், ரகு ஆகியோர் தாங்கள் பயின்ற இறையியல் பயிற்சிக் குறித்து கருத்துரை வழங்கினர்.
பட்டமளிப்பு விழாவில் ஊழியர்கள் ஸ்டீபன், பால்ராஜ், ஷக்கினா எழுப்புதல் ஊழியத்தின் சபை விசுவாசிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஷக்கினா இறையியல் பயிற்சி மையத்தின் பதிவாளர் ஆனி ஜேம்ஸ் நன்றி கூறினார். தொடர்ந்து அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

நெல்லை மாவட்ட செய்தியாளர்
செ.பா.தவசிக்கனி/ எதிரொலி
