உலக பட்டினி தினத்தை முன்னிட்டு சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட அலங்காநல்லூர் வாடிப்பட்டி சோழவந்தான் மேலக்கால் ராயபுரம் குமாரம் ஆகிய பகுதிகளில் தமிழக வெற்றி கழகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது அன்னதானத்தை அந்தந்த பகுதி கழக நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர் சோழவந்தான் மற்றும் மேலக்கால் ஊராட்சியில் நடைபெற்ற உலக பட்டினி தின நிகழ்ச்சியில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா எம் எல் ஏ கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் தியாகராஜன் தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் விஷால் கிருஷ்ணா கலந்து கொண்டு சிறப்பு செய்தார் மேலக்கால் கிராமத்தில் பொதுமக்களுக்கு பிரியாணி விருந்து வழங்கப்பட்டது இதே போல் சோழவந்தான் ராயபுரம் குமாரம் அலங்காநல்லூர் வாடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் உலக பட்டினி பிணத்தைமுன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற்ற அன்னதானத்தை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா தொடங்கி வைத்தார் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

செய்திகள் : காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *