திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் எழுந்து அருளியுள்ள ஸ்ரீ சக்தி பீடங்களில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ காளிகாம்பாள் எனும் ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் முதல் கும்பாபிஷேகம் 1996 இல் நடைபெற்றது.


இரண்டாவது கும்பாபிஷேகம் 2009 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன்பிறகு திருக்கோயிலின் திருப்பணிகள் அனைத்தும் பூர்த்தி ஆகி மூன்றாவது கும்பாபிஷேக பெருவிழா வெள்ளிக்கிழமை தினமான இன்று காலை நடைபெற்றது. ஆலய அறங்காவலர் பி.எஸ்.பழனியப்பன்-விஜயலட்சுமி தம்பதியரின் தலைமையில் சர்வ சாதக திலகம்,ஆன்மீகத் தென்றல் பழவை சிவஸ்ரீ நித்தியானந்த சிவாச்சாரியார் அவர்களால் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.


பழவேற்காடு ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோயில் ஜீவாதார வழிபாட்டு குழு ஏற்பாடு செய்த இந்த கும்பாபிஷேக பெருவிழாவில் ஸ்ரீ கணபதி வழிபாடுடன் மகா கணபதி ஓமம்,வாஸ்து சாந்தி, நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்று பூர்ணாஹீதி யாத்திரா தானம் மற்றும் கடம் புறப்பாடு நடைபெற்று பின்னர் விமான கோபுர த்திற்கும் அருள்மிகு அன்னை ஸ்ரீ காளிகாம்பாளுக்கும், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மகா மேரு ஸ்ரீ சக்கரம், மகாவிஷ்ணு, ஸ்ரீ வீரபத்திரர் உள்ளிட்ட தெய்வங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.



பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் பக்தர் மீது தெளிக்கப்பட்டது.
அப்பொழுது பக்தர்கள் ஓம் சக்தி ஓம் சக்தி என்று பக்தி பரவசத்துடன் அம்மனை வழிபட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது .


இதில் பழவேற்காடு சுற்றுவட்டார பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்திகள் : பழவை முத்து எதிரொலி / 8939476777
