ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், தேவிபட்டிணம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் தூய்மை பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருவதை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
      
ஆய்வின் போது, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தேவிபட்டிணம் ஊராட்சியில் கடற்கரை , நவபாஷானம் பகுதியில் தூய்மை பணிகள் மேற்கொள்வதை பார்வையிட்டார்.
      
அதனைத் தொடர்ந்து கடற்கரை அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலிருந்து திட , திரவ கழிவுகள் கடலில் கலக்காத வகையில் கண்காணித்து துய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அலுவலர்களை அறிவுறுத்தினார்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed