செவிலியர்கள் அனைவரும் செவிலியர்கள் தினமான பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு கொண்டாடப்படும் உலக செவிலியர் தின விழாவினை மிகவும் விமர்சையாக நமது மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கொண்டாடப்பட்டது. விழாவில் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக குத்து விளக்கு ஏற்றி முதல்வர் அவர்கள் மற்றும் அலுவலர்கள் விழாவினை துவக்கி வைத்தார்கள். மேலும்,

செவிலியர்கள் அனைவரும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கீழ்கண்டவாறு உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்.

இந்த அவையில் இறைவன் முன்னிலையில் எனது வாழ்க்கையை தூய்மையாகவும் எனது செவிலிய தொழிலை அர்ப்பணிப்புடனும் நடத்தி செயல்படுவேன் என உறுதி ஏற்கிறேன். எனக்கோ எனது செவிலியர் பெயருக்கோ களங்கம் விளைவிக்கும் அனைத்து செயல்களில் இருந்தும் நான் விலகி இருப்பேன். பிணியாளர்களுக்கு எவ்விதமான கெடுதலையும் விளைவிக்க கூடிய மருந்தினை கொடுக்கவோ நானும் கெடுதல் விளைவிக்கும் மருந்தை எடுக்கவும் மாட்டேன், எனது சக்திக்கு உட்பட்டு எனது செவிலியர் பணியின் தரத்தை நிலைக்கச் செய்யவும் அதன் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் நான் பாடுபடுவேன்,

நான் பணியில் இருக்கும் போது எனக்குத் தெரிந்து வருகின்ற பிணியாளர்களின் தனிப்பட்ட மற்றும் குடும்பம் சம்பந்தப்பட்ட செய்திகள் ரகசியத்தை காப்பேன், எனது முழு மனதுடன் மருத்துவர் நோயாளிகளுக்கு செய்யும் பணிகளில் அவருக்கு உதவியாக இருப்பதுடன் என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பிணியாளரின் நலனுக்காக நான் பாடுபடுவேன் என உறுதி ஏற்கிறேன் என உறுதிமொழி ஏற்றனர்.

மேலும் இவ்விழாவின் சிறப்பு அம்சமாக அனைத்து செவிலியர்களும் முதல்வர் மற்றும் அலுவலர்கள் முன்னிலையில் வண்ண பலூன்களை பறக்க விட்டனர். விழாவில் மருத்துவ கண்காணிப்பாளர் மரு சந்திரசேகரன் உதவி உள்ளிருப்பு மருத்துவ அலுவர்கள் ரோமுள் தயான் ராஜா மரு மது மருதினேஷ் பேராசிரியர்கள் பத்மலதா கவிதா இணை பேராசிரியர்கள் அறிவுமணி, அருண், திலீப், உதவி பேராசிரியர் சரவணன், நிர்வாக அலுவலர் எஸ் கே சரவணன், செவிலியர் கண்காணிப்பாளர்கள் மகாலட்சுமி, அனிதா மற்றும் அனைத்து செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், கிருஷ்ணகிரி நகர் பகுதியில் உள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையிலும் செவிலியர் கண்காணிப்பாளர் சரளமாதேவி ஆகியோர் கலந்துகொண்டு விழாவினை கொண்டாடினர்.

இவ்விழா ஏற்பாடுகளை செவிலியர் நலச் சங்கத்தின் சார்பாக ஸ்ரீதேவி மற்றும் செவிலியர்களும் நகர் பகுதி மருத்துவமனையில் செவிலியர் கோகிலா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

செய்திகள் : மாருதி மனோ எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed