தூத்துக்குடி கனி பேலசில் வைத்து தூத்துக்குடி மாவட்ட கிரேன் உரிமையாளர்கள் நலச்சங்க 3ம் ஆண்டு விழா மற்றும் அன்னையர் தின விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட கிரேன் உரிமையாளர்கள் நலச்சங்க தலைவர் சுயம்புலிங்கம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கு வில்லவராயர் குரூப் நிறுவனங்களின் உரிமையாளர் ஜேசையாவில்லவராயர், ஜெயந்தி குரூப் நிறுவனங்கள் பிரகாஷ், ஷோ ஷிப்பிங் ஸ்டீரிமர் ஏஜன்ட்ஸ் கிஷோர், தமிழக கனரக கிரேன் உரிமையாளர்கள் சங்க தலைவர் ஏ.கே.மணி, சங்கத்தின் 10 கும் மேற்பட்ட பொறுப்பாளர்களுடன் கலந்து கொண்டார்.நிகழ்ச்சியில் தமிழ்நாடு எச்எம்எஸ் உழைப்பாளர் சங்க தூத்துக்குடி மாவட்ட தலைவர் ராஜலட்சுமி ராஜ்குமார், தூத்துக்குடி மாவட்ட சட்ட உதவிமைய மூத்த வழக்கறிஞர் கலைச்செல்வி ஆகியோர் குத்து விளக்கேற்றினார்கள்.

தமிழ்நாடு கனரக கிரேன் உரிமையாளர்கள் சங்கம் துணைத் தலைவர் கலைவாணன்,தமிழ்நாடு கனரக கிரேன் உரிமையாளர்கள் சங்கம் செயலாளர் பீர் முகமது.தமிழ்நாடு கனரக கிரேன் உரிமையாளர்கள் சங்கம் துணைத் தலைவர் பிரகாஷ்.மிழ்நாடு கனரக கிரேன் உரிமையாளர்கள் சங்கம் பொருளாளர் ஜெய்சங்கர் சேலம் காண்ட்ராக்ட் ஒர்க்ஸ் வேலு. மக்கள் டெய்லி செய்தி குழுமம் சிஇஓ கி.ம. சங்கர்.எஸ்கே கன்ஸ்ட்ரக்சன் சாமிகண்ணு, ஆகாஷ் கன்ஸ்ட்ரக்சன் பிரபாகரன், ஹச்எம்எஸ் மாவட்ட செயலாளர் வ உ சி துறைமுகம் ஆணைய உறுப்பினர் துறைமுகம் சத்யா, விமல் ஷிப்பிங் லிமிடெட் ராஜேஷ், பேங்க் ஆப் இந்தியா மேலாளர் கணேஷ் பிரபாகர், எச்எம்எஸ் ஜெயக்குழு உறுப்பினர் ஜான் கென்னடி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

தாெடர்ந்து அன்னையர் தினத்தை கொண்டாடும் விதமாக கேக் வெட்டி சிறப்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகள், இன்னிசை கச்சோி மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed