.

      
அக்னி நட்சத்திரம் என்பதால் சுட்டெரிக்கும் வெயிலால் காட்டிற்குள் தண்ணீர் , இரை கிடைக்காமல் பறவைகள் , விலங்குகள் மிகவும் கஷ்டப்பட்டு அதனை அடைவதற்காக ஆங்காங்கே புள்ளிமான் போன்ற விலங்குகள் நகர் பகுதிகளுக்குள் வரத் தொடங்கியுள்ளன.
    
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா பகுதியில் தனக்கு தேவையான தண்ணீர், இரை கிடைக்காத புள்ளி மான் ஒன்று மீசல் கிராமத்திற்குள் வந்துள்ளது.புள்ளி மானை கண்ட அப்பகுதி தெரு நாய்கள் மானை துரத்திச் சென்று ஆங்காங்கே கடித்து காயப்படுத்தியுள்ளன.
     
இரத்தம் சொட்டச் ... சொட்ட ... உயிருக்கு போராடிய புள்ளி மானை கண்ட கிராம மக்கள் மானை பிடித்து முதலுதவி அளித்ததுடன், வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் மானை ஒப்படைத்தனர்.
  
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பர ... பரப்பை ... ஏற்படுத்தியுள்ளது.

மாமுஜெயக்குமார் ;
மாவட்ட செய்தியாளர் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed