தேர்தல் கண்காணிப்பு அடையாள அட்டைகள் அரசியல் கட்சியினர்களுக்கும், தேர்தல் வியூக அமைப்பாளர்களுக்கும் வழங்கப்படுகிறதா ?
நாளை நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் போது, வாக்கு என்னும் மையங்களுக்கு செல்வதற்காக பத்திரிகையாளர்களுக்கு, தேர்தல் ஆணையம் தரப்பில் அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன. அதில் உண்மையான பத்திரிக்கையாளர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்காமல், அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கும், தேர்தல் வியூக அமைப்பாளர்களுக்கும் மாவட்ட பி ஆர் ஓ – க்கள் அடையாள அட்டைகளை வழங்கி இருக்கிறார்கள் என்ற ஒரு சர்ச்சை எழுந்துள்ள நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க மாநில தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் அதில்,
தி.மு.க வின் சார்பில் கருத்து கணிப்பு செய்து வருபவர்களில் சிலருக்கு ஊடகத்தின் சார்பில் நாளை நடைபெறும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்ல அனுமதி வழங்குவதாக வரும் செய்தி உண்மை என்றால், அது மிகவும் கண்டிக்கத்தகது.

ஏற்கனவே தேர்தல் நடைபெற்ற அன்று, பல மாவட்டத்தில் செய்தியாளர்கள் ஒருதலைப்பட்டமாக நடத்தப்பட்ட நிலையில், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் அதை தேர்தல் அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு சென்றது. நாளை தகுதி உள்ள பத்திரிகையாளர்கள் அனைவரும் வாக்கு என்னும் மைய்யங்களில் அனுமதிக்கப்பட வேண்டும். தேர்தல் வியூக அமைப்பாளர்கள் மற்ற சம்மந்தம் இல்லாதவர்கள் ஊடக அனுமதி வழங்கப்பட்டு வருபவர்களை பத்திரிகையாளர்கள் அனைவரும் கண்காணிக்க வேண்டும். தேர்தல் ஆணையம், ஞாயமான முறையில் வாக்கு எண்ணிக்கை மைய்யங்களில் நாளை செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.

எதிரொலி / 8939476777
