2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தாலுகா அளவில் பணியாற்றும் அச்சு ஊடக பத்திரிகையாளர்கள் மற்றும் காட்சி ஊடக பத்திரிகையாளர்கள் ஆகியோர்களுக்கு வழங்கப்படும் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை ஆகிய நிகழ்வுக்கு அடையாள அட்டை வழங்குவதில் பல மாவட்டங்களில் குளறுபடிகள் செய்த மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு துறை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதேபோல், செய்தியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் குளறுபடி செய்த காவல்துறை அதிகாரிகள், ஆகியோர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,

மேலும், மே 4 ம் தேதி நடைபெறும் வாக்கு என்னும் மையத்தில் செய்தியாளர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டைகளை சீரான முறையில் காட்சி ஊடக பத்திரிகையாளர்களுக்கும், அச்சு ஊடக பத்திரிகையாளர்களுக்கும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று, சென்னை தலைமை செயலகத்தில் மாநில தேர்தல் நடத்தும் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அவர்களிடம் தோழர் .டி.எஸ்.ஆர். சுபாஷ் புகார் மனுவை வழங்கியுள்ளார்.

அப்போது அவருடன், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் நிர்வாகிகள் தேசிய குழு உறுப்பினர்கள் எம்.டி. ராமலிங்கம் , பி.ஜி. பாலகிருஷ்ணன், மாநில ஒருங்கிணைப்பாளர் நா.வினோத் குமார், தென்சென்னை மாவட்ட தலைவர் அ.லட்சுமணன் , மாநில நிர்வாக குழு உறுப்பினர் கழுகு வீரராகவன் மற்றும் சங்க செய்தி தொடர்பாளர் அருண் ஆகியோர் உடன் இருந்தனர்.

எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed