மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி திருக்கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்தல் தொடர்ந்து புண்யாஹ வாசனம் விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கின. திருவாசகம் திருப்புகழ் பாராயணம் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது தொடர்ந்து மாலை சிறப்பு அலங்காரத்தில் சுவாமி நந்தி வாகனத்திலும் அம்பாள் அன்ன வாகனத்திலும் விநாயகர் முருகன் முன் செல்ல சண்டிகேஸ்வரர் தொடர்ந்து பின் செல்ல அதிர்வேட்டுக்கள் மேளதாளம் முழங்க பஞ்சமூர்த்தி களின் திருவீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனைகள் காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

கண்ணன் என்ற பரசுராமன் சிறப்பு பூஜைகள் செய்தார். அர்ச்சகர் செந்தில் குழுவினர் அலங்காரங்கள் செய்தனர். தொடர்ந்து பரதநாட்டிய மாணவியர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலர் கார்த்திகை செல்வி ஆய்வாளர் சாவித்ரி தக்கார் மாலதி மற்றும் ஆலய பணியாளர்கள் உபயதாரர் அயன் தென்கரை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
செய்திகள் : காளமேகம் எதிரொலி / 8939476777
