சோழவந்தான் வடக்கு ரதவீதி பகுதியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவராக மருத்துவ சேவை செய்து வந்தவர் மருத்துவர் கெம்புராஜ் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களுக்கு மருத்துவ சேவை செய்து வந்தவர் வயது முதிர்வு காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் முழு ஓய்வில் இருந்து வந்தார் 10 ஆண்டுகளாக எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாததால் இந்த பகுதி பொதுமக்கள் மருத்துவர் கெம்புராஜ் குறித்து பல்வேறு தகவல்களை கூறிவந்தனர் மருத்துவர் கெம்புராஜுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் இவர்களும் மருத்துவ துறையில் பணியாற்றி வருகின்றனர் ஒருவர் மதுரையிலும் மற்றொருவர் சோழவந்தானின் ஒற்றை அக்ரகாரம் பகுதியில் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனை அமைத்து மருத்துவப் பணி செய்து வருகிறார் கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற நாடாளுமன்ற உள்ளாட்சி மன்ற தேர்தல்களில் வயது முதிர்வு காரணமாக வாக்களிக்க செல்ல முடியாத நிலையில் இருந்த மருத்துவர் கெம்பராஜ் இந்த முறை கண்டிப்பாக தான் வாக்களிக்க வேண்டும் என தனது மகன்களிடம் கூறியதாக தெரிகிறது இந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக முழு ஓய்வில் வீட்டில் இருந்த தனது தந்தை கெம்புராஜ் அவர்களை
நேற்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஜனநாயக கடமை ஆற்ற வைக்க வேண்டுமென மருத்துவர் கெம்புராஜின்
மகன்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

வீட்டை விட்டு வெளியில் வர முடியாத சூழ்நிலையிலும் 100% வாக்களிக்கு வேண்டுமென தேர்தல் கமிஷனின் அறிவுறுத்தலை கருத்தில் கொண்டு தனது வீட்டில் இருந்து அருகில் உள்ள சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு மருத்துவர் கெம்பராஜ் தனது மகன்கள் மற்றும் நண்பர்கள் உதவியுடன் வருகை தந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார் வாக்குப்பதிவு செய்ய வந்த மருத்துவர் கெம்பராஜை பார்த்த அந்தப் பகுதி வாக்காளராகிய பொதுமக்கள் மிகுந்த ஆச்சரியமும் வியப்பும் அடைந்தனர் 10 ஆண்டுகளாக மருத்துவர் கெம்பராஜ் குறித்து எந்த தகவலும் பொதுவெளியில் இல்லாத நிலையில் அவரை நேரில் பார்த்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறி சென்றனர் மேலும் 50 ஆண்டுகளுக்கு மேலாக சோழவந்தான் மற்றும் சுற்றுப்புற கிராம மக்களுக்கு மருத்துவ பணி மூலம் சேவைகள் செய்த மருத்துவரை பார்த்ததில் மிகுந்த நெகிழ்ச்சி ஏற்பட்டதாக கூறினர் இது குறித்து அவர்களது மகன்கள் கூறுகையில் தனது தந்தை மருத்துவப் பணியில் சிறந்து விளங்கியதாகவும் அவரைப் போன்று எங்களையும் மருத்துவர்கள் ஆக உருவாக்கி பொது மக்களுக்கு சிறந்த மருத்துவத்தை வழங்கி வருவதாகவும் தனது தந்தை கேட்டுக் கொண்டதற்கு இணங்க நேற்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவிற்கு மிகுந்த சிரமத்திற்கு இடையில் அழைத்து சென்று அவரை ஜனநாயக கடமை ஆற்ற வைத்ததாக கூறினர் இது போன்ற காரணங்களால் மட்டுமே தற்போது வாக்குப்பதிவு சதவீதம் அதிக அளவு உயர்ந்து இருப்பதாக சமூக ஆர்வலர்கள் அரசியல் பார்வையாளர்கள் கூறினர்

செய்திகள் : காளமேகம் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed