திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் புரட்சிகர இளைஞர் முன்னணி கட்சியினர் திமுகவுக்கு வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆதரவளிப்பதாக பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினர்.
அப்போது, மத்தியில் ஆளும் பாஜக அரசு தொடர்ந்து தமிழக அரசை வஞ்சிப்பதாகவும், தமிழகத்திற்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவது உள்ளிட்ட பல்வேறு அநீதிகளை தமிழக அரசுக்கு இழைப்பதால் தங்கள் புரட்சிகர இளைஞர் முன்னணியினர் திமுக அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அக்கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மலையப்பன் தெரிவித்தார்.

மேலும், இன்று முதல் திமுக ஆதரவாக தொடர் பிரச்சாரத்தில் ஈடுபடபோதாகவும் கூறினார். அப்போது புரட்சிகர இளைஞர் முன்னணி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
செய்திகள் : பழவை முத்து எதிரொலி / 8939476777
