திருப்பரங்குன்றம் பிரச்சனையை பெரிதாக்கியது திமுக தான் அதை முதலிலேயே தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். பாஜக திட்டமிட்டு வேண்டுமென்றே அசாதாரண சூழ்நிலையை உருவாக்கினார்கள்.-

தவெக இணை பொதுச் செயலாளர் சி டி ஆர் நிர்மல் குமார் பேட்டி ;

தமிழக வெற்றி கழகத்தின் திருப்பரங்குன்றம் வேட்பாளராக அறிவித்த பிறகு முதன்முறையாக மதுரை வருவதற்கு தமிழக வெற்றிக்கழக இணை பொதுச் செயலாளர் சி டி ஆர் நிர்மல் குமார் சென்னையில் இருந்து விமானம் மூலம் வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து சி.டி.ஆர்.நிர்மல் குமார் கூறுகையில்:

முதல் கட்டமாக எங்கள் தலைவர் வேப்பமனு தாக்கல் செய்யப்பட்டு பிரச்சாரம் தொடங்கியுள்ளது. எங்கள் தலைவரின் பிரச்சாரத்தில் எங்கேயுமே காவல்துறை இல்லை.

டெல்லி, தமிழக தேர்தல் ஆணையத்திற்கு புகார் கொடுத்திருக்கிறோம். தசாவதாரண சூழ்நிலை நடக்க வேண்டும் என காவல்துறை செயல்படுகிறார்களா என தெரியவில்லை சென்னை காவல்துறை வேண்டுமென்றே செய்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

மைக், ஸ்பீக்கர் பயன்படுத்த எங்க தலைவருக்கு கடைசி நிமிடம் வரை அனுமதி வழங்கவில்லை. காவல்துறை திமுகவிடம் பணம் பெற்று கைக்கூலியாக செயல்பட்டு வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் அனுப்பி உள்ளோம்.

இந்த தேர்தல் மாற்றத்திற்கான தேர்தல், அதிமுக கட்சி என்ற கட்சி இந்த தேர்தலுக்குப் பிறகு இருக்காது. அதிமுகவுக்கு வாக்களிப்பது பாஜகவிற்கு வாக்களிப்பது சமம். இந்த தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் இருக்கப் போவதில்லை. அவர்கள் பாஜக கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள். இந்த தேர்தலுக்குப் பிறகு அதிமுக கட்சியே இருக்காது பாஜகவில் சேர்க்கப்படுவார்கள்.

திருப்பரங்குன்றம் பிரச்சனையை பெரிதாக்கியது திமுக தான் அதை முதலிலேயே தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். பாஜக திட்டமிட்டு வேண்டுமென்றே அசாதாரண சூழ்நிலையை உருவாக்கினார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்ன இருந்ததோ அதை தான் மக்கள் விரும்புகிறார்கள்.

திருப்பரங்குன்றத்தில் மக்கள் அங்கு இருப்பவர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். நூறு ஆண்டு அமைதியாக இருந்த திருப்பரங்குன்றத்தை சர்ச்சைக்குரிய பகுதியாக மாற்றிய திமுகவுக்கும், பாஜகவுக்கும் கண்டனம் தெரிவிக்கிறோம்.

திருப்பரங்குன்றம் பாரம்பரியத்தை தாங்கி இருக்கும் இடம் அதை சுற்றி எந்த வளர்ச்சியும் இல்லை. வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும் கல்லூரிக்கு அடிப்படை வசதிகள் இல்லை. இந்த பகுதி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவோம். திருப்பரங்குன்றம் பிரச்சாரத்திற்கு தலைவர் கண்டிப்பாக வருவார். இன்று தலைவர் பிரச்சாரத்தில் நடைபெற்றது திமுகவின் சதி.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed