தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-யை, முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வட்டார போக்குவரத்து துறை , தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்துறை இணைந்து ஆட்டோ மூலம் வாக்காளர் விழிப்புணர்வு குறித்து வாகனப் பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது.   
    
நிகழ்ச்சியில் , மாவட்ட தேர்தல் அலுவலரும் , ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜித் சிங் காலோன் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு குறித்த துண்டுபிரசுரங்களை வழங்கியதுடன், செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டு ஒவ்வொரு ஆட்டோவிலும் முன்பக்கம் , பின்பக்கங்களில் பொதுமக்கள் பார்த்து அறிந்திடும் வண்ணம் வாக்காளர் விழிப்புணர்வு குறித்த நோட்டீஸ்கள் ஒட்டி ஆட்டோ வாகனங்களின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் 

சிம்ரன்ஜீத் சிங் காலோன் பச்சை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு நிறைவாக பேருந்து நிலையத்தை வந்தடைந்தன.
நிகழ்ச்சியில் , தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட திட்ட அலுவலர் பாபு , வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் , வட்டார போக்குவரத்து ஆய்வாளர் தங்கராஜ் அவர்கள் , செய்தி – மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி , உதவி அலுவலர் நா.விஜயகுமார் , ஆட்டோ ஓட்டுநர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *