மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரே தனி தொகுதியான சோழவந்தான் சட்டமன்ற தொகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடுகிறார். 2011 2016 காலகட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சோழவந்தான் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வந்த இவர் தற்போது தமிழக வெற்றி கழகத்தில் விஜய் அவர்களின் தலைமையை ஏற்று மீண்டும் வேட்பாளராக போட்டியிடுகிறார் அவருக்கு தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பொதுமக்கள் அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

சோழவந்தான் பகுதியில் பல்வேறு பகுதிகளில் நன்கு அறிமுகமான எம்வி கருப்பையா தான் எம்எல்ஏவாக பதவி வகித்த காலகட்டங்களில் பல்வேறு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வந்துள்ளதாக தொகுதி மக்கள் சார்பில் கூறப்படுகிறது மேலும் தற்போதைய சூழலில் திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் கடும் சவாலை கொடுக்க கூடிய அளவில் சோழவந்தான் தொகுதியை சார்ந்த ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது சமீப காலம் முதல் உள்ளூர் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டுமென சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை கூறி வந்த நிலையில் பொதுமக்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் உள்ளூர் வேட்பாளருக்கு வாய்ப்பளித்திருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம் என சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் சார்பற்றவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் மேலும் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்எல்ஏ எம்வி கருப்பையா வெற்றி பெறும் பட்சத்தில் சோழவந்தான் தொகுதியின் முக்கிய பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது மதுரை மாவட்டத்தில் கடும் சவாலை எதிர்நோக்கி இருக்கும் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பதை வருகின்ற மே 4ந் தேதி வாக்கு எண்ணிக்கையின் போதுதான் தெரிய வரும் என்கிறார்கள் சோழவந்தான் தொகுதி வாக்காளர்கள்.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி / 8939476778

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *