மதுரை மாவட்டம் சோழவந்தான் பூமேடு தெரு அருள்மிகு ஸ்ரீ உச்சிமாகாளி அம்மன் ஸ்ரீ வடகத்தி காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த வாரம் செவ்வாய் சாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து வெள்ளிக்கிழமை திருக்கோவில் முன்பாக விளக்கு பூஜை நடைபெற்றது பாண்டி முனீஸ்வரர் தெய்வீக பாடல்களை பாடி விளக்கு பூஜை நடைபெற்றது.

தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை தொழிலதிபர் எம்வி எம் மணி முத்தையா, கலைவாணி பள்ளி நிர்வாகி வள்ளியில், எம் ஏ எம் கலைவாணி பள்ளி தாளாளர் மருது பாண்டியன் செல்வி மற்றும் பூமேட்டு தெரு கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
செய்திகள் : காளமேகம் / எதிரொலி / 8949476777
