தோழர் டி.எஸ்.ஆர். சுபாஷ் !

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோள்களை ஏற்று தேர்தல் அறிக்கையில் பத்திரிகையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அறிவித்தமைக்கு நன்றி ! குறிப்பாக, தாலுக்கா அளவில் பணியாற்றும், செய்தியாளர்கள், ஊடகவியலாளர்களுக்கும், அரசு அங்கீகார அட்டை மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதி மகிழ்ச்சி !

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 10 வருடங்களாக நலவாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று போராடி வந்தோம் !அன்றைய செய்தித் துறை அமைச்சர் மாண்புமிகு கடம்பூர் ராஜூ அவர்கள் அதற்கான பணிகளை செய்தார் ! ஆனால், பொருளாதார ரீதியாக கடைசி நேரத்தில் அது செயல்பட முடியாமல் போனதாக சொல்லப்பட்டது !

அது சமயம், தி.மு.க தேர்தல் அறிக்கையில் நலவாரியம் அமைக்கப்படும் என்று உறுதி அளித்தனர் ! ஆகையால், அந்த தேர்தலில் தி.மு.க விற்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் ஆதரவு அளிக்க முடிவு செய்தது.

ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டாம் ஆண்டில் உலகத்தில் எங்குமே நாம் யாரும் கேள்விப்படாத முதலாளிகளை முன்னிலைப்படுத்தி பெயரளவில் நலவாரியத்தை ஏற்படுத்தியது !ஆகையால் மேலும் சில கோரிக்கைகளை நாங்கள் முன் வைக்கிறோம் ! தமிழகத்தில் தற்போது உள்ள பத்திரிகையாளர் நல வாரியத்தை மாற்றி அமைக்க வேண்டும் ! முதலாளிகளுக்கு பதிலாக தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அதில் இடம் பெற வேண்டும் !

தமிழகத்தில் பத்திரிகையாளர்களுக்கு கூட்டுறவு சொசைட்டி தொடங்க வேண்டும் ! மாநில நெடுஞ்சாலையில் டோல்கேட் போன்றவற்றில் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் !

RNI பதிவு பெற்ற அனைத்து பத்திரிகையாளர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு செல்லும் பொழுது சிறப்பு சிகிச்சை வார்டு அரசு மருத்துவமனைகளில் ஒதுக்கீடு செய்ய ஆவணம் செய்ய வேண்டும் !

போன்ற கோரிக்கைகளை தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம் ! எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும் கட்சி எதுவோ அதற்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் முழு ஆதரவு தரும் என்பதை தெரிவித்து கொள்கிறோம் ! என, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில தலைவர், டி.எஸ்.ஆர். சுபாஷ் அவர்கள் தனது அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed