திருநெல்வேலி மாநகரம் பாளையம்கோட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், அரசியல் செயல்பாட்டாளருமான வழக்கறிஞர் சு.பத்மராஜ், பொதுமக்கள் மத்தியில் தனித்துவமான இடத்தை பெற்றுள்ளார். சிறுவயதிலிருந்தே சமூக சேவையில் ஈடுபட்டு, பல்வேறு பொதுநல நடவடிக்கைகளில் முனைப்புடன் செயல்பட்டு வரும் சு.பத்மராஜ், திமுக கட்சியில் பல்வேறு நிலைகளில் பொறுப்பேற்று, கட்சியின் வளர்ச்சிக்கும், மக்களுடன் உறவை வலுப்படுத்துவதற்கும் தொடர்ந்து உழைத்து வருகிறார்.

தற்போது திமுக நெல்லை மத்திய மாவட்ட தொண்டர் அணித் தலைவராகவும், 5ஆவது வார்டு வட்டச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். தனது பொறுப்பை திறம்பட மேற்கொண்டு, கட்சி மற்றும் பொது மக்களுக்கிடையே நன்மதிப்பை பெற்றுள்ளார். இந்நிலையில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திருநெல்வேலி மற்றும் பாளையம்கோட்டை தொகுதியில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு அளித்து, கட்சியின் நேர்காணலிலும் கலந்துகொண்டுள்ளார்.

இதன் மூலம், தொகுதி மக்களுக்கு நேரடியாக சேவை செய்யும் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார். வழக்கறிஞர் சு.பத்மராஜ் சமூகத்தில் பெற்றுள்ள நல்ல பெயர், பல ஆண்டுகளாக செய்துவரும் பொதுநலச் சேவைகள் மற்றும் கட்சிக்கான அர்ப்பணிப்பு, கட்சித் தலைமை மீது கொண்டுள்ள பற்று ஆகியவை அவருக்கு வலுவான ஆதரவாக உள்ளன.

குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும், அவர் போட்டியிடும் பட்சத்தில் வெற்றி பெறும் வாய்ப்புகள் மிக அதிகம் எனவும் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், தொகுதியின் நிலைமை, மக்களின் தேவைகள் ஆகியவற்றை நன்கு அறிந்தவர் என்ற முறையில், அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் தொகுதி வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களை முன்னெடுப்பார் என்ற நம்பிக்கையும் பொதுமக்களிடையே காணப்படுகிறது.
நெல்லை / செய்தியாளர் /
செ.பா.தவசிக்கனி / எதிரொலி / 8939476777
