உலகளாவிய அறிஞர்கள் பங்கேற்பு...
திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசு தன்னாட்சிக் கல்லூரியின் முதுகலை ஆங்கிலத் துறை சார்பில், “ஆங்கில ஆய்வுகளில் வளர்ந்து வரும் புதிய கோட்பாடுகள்” (ICEPES 2026) குறித்த இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் அமெரிக்கா, பிரிட்டன் ஐக்கிய ராஜ்யம் மற்றும் இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த சிறந்த பேராசிரியர்கள்,ஆங்கில இலக்கிய ஆராய்ச்சியாளர்கள் இதில் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றினர். ஆங்கில இலக்கிய துறை தலைவர் முனைவர்.பிரபு வரவேற்புரையாற்றிய
இவ்விழாவில் தலைமை உரை ஆற்றிய கல்லூரியின் முதல்வர் டாக்டர் எம். எஸ். தில்லைநாயகி, கிராமப்புற மற்றும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதில் இக்கல்லூரி கொண்டுள்ள 61 ஆண்டுகால பெருமைமிக்க வரலாற்றை எடுத்துரைத்தார். உலகளாவிய பங்கேற்பை உறுதி செய்யும் வகையில் நேரடி மற்றும் இணைய வழி என இரு நிலைகளிலும் (Hybrid Mode) நடத்தப்பட்ட இக்கருத்தரங்கத்தினை சென்னை பல்கலைக்கழக ஆங்கிலத் துறைத் தலைவரும், சென்னை பல்கலைக்கழக துணைவேந்த தேர்வு குழு உறுப்பினருமான பேராசிரியர் டாக்டர் எஸ். ஆம்ஸ்ட்ராங் துவக்கி வைத்து தொடக்க உரை ஆற்றினார்.

அப்போது அவர் கூறும்போது உ.நா.அரசு கல்லூரி போன்ற கல்லூரிகள் கிராமப்புற பகுதிகளில் இருப்பதால் இங்குள்ள மாணவர்கள் தங்கள் ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள ஆங்கில இலக்கியத்துறை சார்பில் வருகின்ற கோடை காலத்தில் ஒரு வார கால ஆங்கில பயிற்சி முகாம்கள் கல்லூரியில் நடத்துவதற்காக ஆலோசிக்கப்பட்டு உள்ளது எனவும், உலகத்திலேயே ஒரு மனிதனுக்கு தாய் மொழி மிகவும் முக்கியம், நமது தாய் மொழியை உயர்த்துவதற்காக அந்நிய மொழியை பயன்படுத்தலாம் என்றார்.
மேலும், தேவாரம்,திருவாசகம் போன்ற தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் ஏன் பாடத்திட்டங்களாக கொடுக்கக் கூடாது எனும் கேள்விக்கு;
நிச்சயமாக செய்யலாம் தற்போது
தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் இதற்கான பணிகளை செய்து வருகிறது. தேவாரம் திருவாசகம் போன்ற பழங்கால நூல்களில் அச்சடிக்காமல் விடுபட்டுப் போன பல்வேறு ஏடுகளை மறு பதிப்பு செய்து வருகின்றனர். ஏப்ரல் 23ஆம் தேதி உலக புத்தக தினம் புத்தக விழாவாக கொண்டாடப்படுகிறது. அன்று பல்கலைக்கழகங்களில் இது போன்ற நூல்களை பங்கெடுக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.

முதல் நாளில், அமெரிக்காவின் டிராகோயர் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் சாலமன் ரீஸ் டிஜிட்டல் கற்பித்தல் முறைகள் குறித்தும், புதுச்சேரி மத்திய பல்கலை கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஐஸ்வர்யா எஸ்.பாபு கூறினார்.
லண்டன் சிஇசிஓஎஸ் (CECOS) கல்லாரியைச் சேர்ந்த டாக்டர் மரியா டயானாஇந்தியச் சூழலில் நாடுகடந்த இலக்கியங்கள் குறித்தும் உரையாற்றினர். ஆங்கில ஆய்வுகளில் நவீன தொழில்நுட்பங்களின் தாக்கம் குறித்து அருணாச்சல பிரதேச என்.ஐ.டி-யைச் சேர்ந்த டாக்டர் விஜயகுமார் கே மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜெ. ஜெயச்சந்திரன் ஆகியோர், ஆராய்ச்சி மற்றும் கற்பித்தலில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் ஹ்யூமானிட்டீஸ் (Digital Humanities) ஆகியவற்றின் முக்கியத்துவத்தை விளக்கினர். லண்டன் சவுத் ஈஸ்ட் கல்லூரியை சேர்ந்த டாக்டர் ரோஸ்லிஸ் பிரான்சிஸ் மொழிசார் குடியுரிமை மற்றும் அடையாளம் குறித்தும், டெல்லி பல்கலைக்கழகத்தின் டாக்டர் எஸ். வரதராஜ் இந்தியக் குரல்களின் பரிணாம வளர்ச்சி குறித்தும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்


நிறைவு விழாவில் சென்னை பல்கலைக்கழகத்தின் டாக்டர் சுபாலா பாண்டியராஜன், ஆங்கில ஆய்வுகளின் எதிர்கால திசைகள் குறித்து உரையாற்றினார். சிறந்த ஆய்வுகளை ஊக்குவிக்கும் நோக்கில், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் டாக்டர் டி. பிரபு, தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு சிறந்த ஆய்வுக் கட்டுரைகளுக்குச் சிறப்புப் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஆங்கிலத் துறை மற்றும் வரலாற்று துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த துறை தலைவர்கள் பேராசிரியர்கள், ஆங்கில இலக்கியத்துறை மாணவ மாணவிகள் இதில் கலந்து கொண்டனர்.
செய்திகள் : பழவை முத்து / எதிரொலி / 8939476777
