தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு துணை ராணுவ படை வீரர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினர், தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், காவல்துறையினர் ராணுவ படையினர் அணிவகுப்பு நடத்தினர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், விருத்தாசலத்தில் தேர்தல் அமைதியான முறையில் நடக்கவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையிலும் போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.

விருத்தாசலம் காவல் நிலையத்தில் விருத்தாசலம் காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் தொடங்கிய ஊர்வலம் கடலூர் சாலை, ஜங்ஷன் சாலை, கடைவீதி மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட முக்கிய வீதி முழுவதும் ஊர்வலம் நடைபெற்று காவல் நிலையத்தை அடைந்தது.


மத்திய போலீஸ் பாதுகாப்பு படை தலைமை காவலர் மற்றும் விருத்தாசலம் போலீசார் இணைந்து ஊர்வலத்தை நடத்தினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிரொலி / 8939476777
