கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டம், தொட்ட மஞ்சு கிராமத்தில் மலைவாழ் பழங்குடியினரான உள்ளீரன் என்பவர், தினக்கூலியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய 7 வயது குழந்தை உ. கிரண் பிரகாஷ், கண்பார்வை குறைபாட்டுடன் இருப்பதை சிறுவன் பயின்று வந்த அரசு பள்ளி ஆசிரியர் கண்டறிந்து சுகாதாரத் துறைக்கு உரிய தகவல் அளித்ததன் பேரில், சுகாதாரத் துறையின் ஆர்.பி.எஸ்.கே.எஸ் திட்டத்தின் மூலம் கடந்த வாரம் அந்த மாணவருக்கு கண் பரிசோதனைகள் செய்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக பரிந்துரைத்து அனுப்பி வைத்துள்ளனர்.

சிறுவன் உ.கிரண்பிரகாஷ் அவர்களுக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கண் சிகிச்சைக்கு தேவையான அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் செய்து இவருக்கு பிறவியிலேயே கண் பார்வை குறைபாடு (Congenital Cataract) இருப்பதையும் மருத்துவ குழுவினர் கண்டறிந்தனர். இவருக்கு உரிய சிகிச்சை அளித்திட கல்லூரி முதல்வர் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில், பிறவி கண்பார்வை குறைபாட்டிற்கான அறுவை சிகிச்சைக்கு தேவையான அனைத்து வித பரிசோதனைகளும் உடனுக்குடன் மேற்கொண்டு சிறுவன் உ. கிரண்பிரகாஷ் க்கு கண் அறுவை சிகிச்சையினை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் அவர்களின் மேற்பார்வையில் கண் சிகிச்சை பிரிவு சிறப்பு மருத்துவ குழுவினர் மரு, டி.கே.சுதாகர் இணை பேராசிரியர் மற்றும் குழுவினர் சிறப்புடன் செய்து முடித்தனர்.

சிறுவனுக்கு நல்ல கண் பார்வை கிடைக்க பெற்றது. கண் பார்வை கிடைக்க பெற்ற பின் அந்த சிறுவனால் நன்றாக பார்க்கவும், படிக்கவும் முடிகிறது. இத்தகைய பிறவி கண் குறைபாடு நோய் தாக்கம் அடைந்த சிறுவர், சிறுமியர்களுக்கு அறுவை சிகிச்சைகள் உயர் மருத்துவமனைகளான கோயம்புத்தூர் மற்றும் சென்னை கண் மருத்துவமனைகளிலும் சில தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே செய்யப்படுகிறது.
இந்த அறுவை சிகிச்சை முற்றிலும் இலவசமாக, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் சிறப்பாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் செய்து முடிக்கப்பட்டுள்ளது மருத்துவ குழுவினரை கல்லூரி முதல்வர் பாராட்டினார்கள்.

கண் பார்வை கிடைக்கப் பெற்ற பின் சிறுவன் மற்றும் சிறுவனுடைய குடும்பத்தினர் முதல்வர் மற்றும் கண் சிகிச்சை பிரிவு மருத்துவர்களுக்கு தமது நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்தனர்.
செய்திகள் : மாருதி – மனோ / கிருஷ்ணகிரி / எதிரொலி / 8939476777
