பென்னிங்டன் பள்ளியின் 13-வது ஆண்டு ஆண்டு விழா, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பென்னிங்டன் கலையரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பென்னிங்டன் கமிட்டியின் உப-தலைவர் முத்து பட்டர் தலைமை தாங்கினார். முன்னிலை வகித்த “சித்தாந்த ரத்தினம்” ப. கோவிந்தன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு, வந்திருந்த அனைவரையும் பள்ளியின் உப தலைவர் முனைவர் ஜெயக்குமரன் வரவேற்று அறிமுக உரை நிகழ்த்தினார். தொழிலதிபர் ஏ.எம்.எம். ராதா சங்கர் முக்கிய விருந்தினர் இராஜபாளையம் மண்டல ஜி.எஸ்.டி. உதவி ஆணையர் எம். புகழேந்தி ஐ.ஆர்.எஸ். அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தினார். பொருளாளர் ஜி.அம்சவேணி முக்கிய விருந்தினருக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.

கலை மற்றும் அறிவுத்திறன் போட்டிகளில் வென்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எம். புகழேந்தி பரிசு வழங்கி வாழ்த்தினார். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்வில், பென்னிங்டன் கமிட்டியின் உறுப்பினர்களான “மனம் மகிழ” ராஜாராம், மூத்த வழக்கறிஞர் எஸ். ரமேஷ், தொழிலதிபர் ஏ.எல்.ராம் நாராயணன், வர்த்தகப்பிரமுகர் எஸ். ராஜேஷ் கனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் இறுதியில், விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் பள்ளியின் செயலாளர் பி. சிவகுமார் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பென்னிங்டன் பள்ளி ஆசிரியைகள், நூலகப் பணியாளர்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சியை பள்ளி முதல்வர்கள் அழகு சந்தான லட்சுமி மற்றும் முத்து லட்சுமி ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.

செய்திகள் : சிவராஜ் மற்றும் சுந்தர்ராஜன் / ஸ்ரீவில்லிபுத்தூர் /எதிரொலி / 8939476777
