கிருஷ்ணகிரி அரசு மகளீர் கலை கல்லூரியில் நடைபெற்ற குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு நிகழ்சியில் எக்காரணம் கொண்டு குழந்தைத் திருமணத்தினை அனுமதிக்க மாட்டோம் என்று மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

கிருஷ்ணகிரி அரசு மகளீர் கலைக் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கிராம பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளையும் இணைத்து குழந்தை திருமணம் மற்றும் பாலியல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் பிரசன்னகுமாரி, இயக்குனர் அலமேலு, காவல் ஆய்வாளர் மணிமாறன், குழந்தைகள் நல குழுமத்தின் உறுப்பினர் டாக்டர் பன்னீர்செல்வம், மோகன்குமார் ஆகியோர் கலந்து கொண்டு குழந்தை திருமணம் செய்வதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்க உரை ஆற்றினார்கள்.

மேலும், இக்கூட்டத்தில் கலந்து கொண்ட காவல் ஆய்வாளர் மணிமாறன் மாணவிகள் மத்தியில் உரையாற்றும் போது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்னும் அறியாமை நிலையில் குழந்தை திருமணங்கள் நடப்பது வாடிக்கையாகி விட்டது.
இது குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் கிராமங்களில் குழந்தை திருமணங்கள் அறியாமல் நடக்கிறது. இது போன்ற அவலங்களை தடுக்க போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும், மேலும் இது மட்டுமின்றி பாலியல் தொடர்பான பிரச்சனைகளில் இருந்தும் விழிப்புணர்வு வேண்டும். கல்லூரி மாணவிகளான நீங்கள் சமுதாயத்தில் உயர்த்த நிலைப்பாட்டுக்கு வர நன்றாக படித்தால் மட்டுமே அது சாத்தியமாகும் என்று குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து குழந்தை திருமணம் குடும்பத்தை சீரழித்து விடும் ஆகையால் கல்லூரி மாணவிகள் ஒருபோதும் குழந்தை திருமணத்திற்கு அனுமதிக்கமாட்டோம் என்று உறுதி மொழியினையும் எடுத்துக்கொண்டனர்.

அப்போது, களப்பணியாளர் கீதா உள்ளிட்ட ஏராளமான கல்லூரி மாணவிகளும் கலந்துக் கொண்டனர்.

செய்திகள் : மாருதி மனோ /கிருஷ்ணகிரி / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed