கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் செயல்வீரர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய 200 க்கும் மேற்பட்டவர்கள் த.வெ.க கட்சியில் இணைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தினரின் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சூளகிரி தெற்கு ஒன்றிய செயலாளர் சிவராஜ் தலைமையில் வெகுசிறப்பாக நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்திற்கு கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட செயலாளர் சுரேஷ், மேற்கு மாவட்ட செயலாளர் வடிவேல், கழகப் பிரமுகர் எஸ்.ஆர். சம்பங்கி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கழக நிர்வாகிகளுக்கு தேர்தல் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்கள்.

மேலும் இக்கூட்டத்தில் இருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்ட மன்றத் தொகுதிகளிலும் த வெ க கட்சி வலுவான நிறையில் உள்ளது, இதனை பயன்படுத்தி வாக்காளர்களை வாக்களிக்க ஊக்கு விக்க வேண்டும், குறிப்பாக மத்திய அரசு த வெ க கட்சியை நசுக்குகின்ற பணியில் ஈடுபட்டுள்ளது, இதனை முறியடித்து வருகின்ற தேர்தலில் மத்திய மாநில அரசுகளுக்கு பாடம் புகட்டப்பட வேண்டும் என்ற கொள்கையுடன் செயல்பட வேண்டும். மேலும் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாட்டுகள் குறித்து கிராமங்கள் தோறும் தின்னைப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் த வெ க கட்சியின் வெற்றிக்காக உழைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மேலும் இந்தக்கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 200 க்கும் மேற்பட்டவர்கள் கழகப் பிரமுகர் எஸ்.ஆர்.சம்பங்கி முன்னிலையில் இணைந்தனர். த.வெ.க கட்சியில் இணைத்தவர்களை மத்திய மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் கட்சி சால்வை அணிவித்து வரவேற்றார்.

இந்தக்கூட்டத்தில் தவெக கட்சியை சேர்ந்த நிர்வாகிகளான பசவராஜ், திம்ராஜ், பிரசாந்த், பார்த்தசாரதி, சீனிவாசன், சபரி, பிரதீப், நாகராஜ், சந்தோஷ், சீனி, ரஞ்சித், சுதாகர், முனிராஜ், இளங்கோ, துரை, சந்தோஷ் வீரபத்ரன், லிங்கா, மணி, சதீஷ் பாபு, வெங்கடேஷ் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கழக நிர்வாகிகளும், மகளிர் அணி நிர்வாகிகளும், சார்பு அணியை சார்ந்த அனைத்து நிர்வாகிகளும், BLA2, வாக்குச்சாவடி முகவர்களும் கலந்து கொண்டனர்.
செய்திகள் : மாருதி – மனோ /கிருஷ்ணகிரி / எதிரொலி / 8939476777
