பொன்னேரி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் இயங்கி வரக்கூடிய, ஸ்ரீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது. பின்னர், அதனை தொடர்ந்து அந்த கல்லூரி நிர்வாகத்தின் கீழ், ஆசிரியர் பயிற்சி அளிக்கக்கூடிய கல்வியியல் கல்லூரியும் , மற்றும் நர்சிங் கல்லூரி , போன்ற பயிற்சி நிறுவனங்களும் துவக்கப்பட்டு மிகவும் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

இந் நிலையில், அந்த கல்லூரியின் வெள்ளி விழா ஆண்டு நிகழ்வை மிகவும் சிறப்பாக கொண்டாட வேண்டி முடிவு எடுத்த கல்லூரியின் செயலாளர் ரமேஷ் அவர்கள் கல்வியியல் கல்லூரியின் தாளாளர் ஐயா பச்சையப்பன் அவர்கள் மற்றும் நர்சிங் கல்லூரி தாளாளர் ரமா ரமேஷ் அவர்கள் மற்றும் கல்லூரி முதல்வர் மரியம் லியோனி பமிலா அவர்கள் உட்பட நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்தார்.

அதன் அடிப்படையில், கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகளை கொண்டு ஒரு விழா குழு அமைத்து, இந்த குழுவினர் ஆலோசனையின்படி, வெள்ளி விழா கொண்டாட்டங்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கொண்டாடுவது எனவும், அதில் மாணவ, மாணவிகள் பங்கு கொண்டு அவர்களுடைய தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பு வழங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, பிப்ரவரி 26 ம் தேதி துவங்கி, 28ம் தேதி வரை 3 தினங்கள் கல்லூரியின் வெள்ளி விழா கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில், நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டது, நிகழ்ச்சிகளுக்கு சில தினங்களுக்கு முன்னதாகவே கோலப்போட்டிகள், பேச்சு போட்டிகள், கவிதை போட்டிகள் உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தப்பட்டது.

அதில், முதல் நாள், கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான பாட்டு போட்டி, நடனப்போட்டி உட்பட பலவிதமான போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும், நடத்தப்பட்டது. இரண்டாவது நாள் புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுடைய ஆடல், பாடல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

மூன்றாவது நாள் கலை நிகழ்ச்சிகளுடன், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, கல்வியல் கல்லூரியின் தாளாளர் ஐயா பச்சையப்பன் அவர்களும், ஸ்ரீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலாளர் ரமேஷ் அவர்களும், நர்சிங் கல்லூரியின் தாளாளர் ரமா ரமேஷ் அவர்களும், கல்லூரி முதல்வர் மரியம் லியோனி பமிலா அவர்களும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கியும், பரிசுகள் வழங்கியும் வாழ்த்தி பேசினார்கள்.

இந்த மூன்று நாள் கலை நிகழ்ச்சிகளிலும், திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை புகழ்பெற்ற நடிகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள், நடிகர் தங்கதுரை, பலகுரல் கலைஞர் வெங்கடேஷ், பின்னணி பாடகர்கள் பத்மலதா, ஜூனியர் நித்தியா, சரத் மேத்யூ, விக்னேஷ் ஆகியோரும் கலந்துகொண்டு கலை நிகழ்ச்சிகளை நடத்தி மாணவ, மாணவிகளை மகிழ்ச்சிப்படுத்தினர்.

எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed