கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வாய் பகுதியில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள பாண்டியன் கெமிக்கல்ஸ் தொழிற்சாலையின் குடோன் பகுதியில் வியாழக்கிழமை விபத்து ஏற்பட்டு, அதனால் வானுயர எழும்பிய புகையால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வாய் பகுதியில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் பாண்டியன் கெமிக்கல்ஸ் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையின் குடோன் பகுதியில் சோடியம் குளோரைட் வேதிப் பொருள் மூட்டைகளில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சோடியம் குளோரைட் மூட்டைக வைக்கப்பட்டு இருந்து அறையின் அதிக வெப்பத்தன்மை காரணமாக மூட்டைகளில் இருந்து புகை உண்டாகி, அந்த புகை வானுயர எழும்பி தேர்வாய் பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது.

மேலும் சோடியம் குளோரைடு புகை காற்றில் கலந்ததால் ஏற்பட்ட லேசான நெடி அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில், இது தொடர்பாக அறிந்த தேர்வாய்
சிப்காட் தீயணைப்பு நிலைய அதிகாரி முத்து தலைமையில் தீயணைப்பு துறையினர் 30 நிமிடம் போராடி சோடியம் குளோரைடு மூட்டைகளில் நீரை பீய்ச்சி அதில் இருந்து உருவாகிய புகையை கட்டுப்படுத்தினர்.

மேலும், சோடியம் குளோரைடு எப்போதும் குளிரூட்டப்பட்ட அறையில் சேமிக்க வேண்டும் என்பதற்க மாறாக சாதராண அறையில் அதனை அடைத்து வைத்ததால் இந்த விபத்து
ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினர் தகவல் தெரிவித்தனர். இந்த நிலையில் இந்த விபத்து குறித்து பாதிரிவேடு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேற்கண்ட தொழிற்சாலையின் வேதி கழிவுகள் நீர் நிலைகளில் கலப்பதாக ஏற்கெனவே அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், இது போன்ற அஜாக்கிரதை காரணமாக ஏற்படும் விபத்துகளை தவிர்க்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்திகள் : ஜான் பிரான்சிஸ் /கும்மிடிப்பூண்டி / எதிரொலி / 8939476777
