கிருஷ்ணகிரி ராமர் திருக்கோவில் அருகில் நகர தேசிய ஜனநாயக் கூட்டணி கட்சியின் சார்பில் தமிழக அரசின் அவலங்களை கண்டித்து தெருமுனை பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி நகர பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் சாமி சரவணன் ஏற்பாட்டில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரக் கூட்டத்திற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியை சேர்ந்த அதிமுக நகர செயலாளர் கேசவன், அம்மா மக்கள் கட்சியின் நகர செயலாளர் குமார், பாரதிய ஜனதா கட்சியின் இராணுவ பிரிவு மாநில செயலாளர் கோவிந்தராஜ், நகர பரதிய ஜனதா கட்சியின் நகர தலைவர் விமலா, நகர் மன்ற உறுப்பினர் சங்கர், பாரதிய ஜனதா கட்சியின் நகர பொதுச் செயலாளர்கள் மணிவண்ணன், வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்த தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தின் போது தமிழகத்தல் கடந்த 5 ஆண்டுகளாக மக்களுக்கு என எந்த திட்டமும் செயல்படுத்தப்படாமல் போதை கலாச்சாரத்தினை கட்டவிழ்த்து விட்டதின் காரணமாக இன்று பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கூட மதுபோதைக்கு அடிமையாக உள்ளனர்.

இது போன்ற போதை கலாச்சாரத்தை வேறோடு அகற்ற வேண்டும் என்றால் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிக்கு உங்களுடைய ஆதரவு இருக்க வேண்டும், தேர்தல் வாக்குறுதியாக கவர்ச்சியான திட்டங்களை அறிவித்து தமிழ்நாட்டை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்வார்கள் என்பதை புரிந்து நாடு நலம் பெறவும் , நாமும் நலமுடன் வாழ தமிழகத்தில் நல்லாட்சி அமைய தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வர வேண்டும், அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்களுடைய வாக்கு மட்டுமே இதை நீங்கள் சரியாக பயன்படுத்தினால் நாடு நலம் பெறுவதோடு நாமும், நம்மை சார்ந்துள்ள குடும்பமும் காக்கப்படும், ஆகையால் வாக்காளர்களாகிய நீங்கள் கிருஷ்ணகிரியில் தேசிய மக்கள் கட்சி சார்பில் யார் போட்டியிட்டாலும் அவர்களை வெற்றிப் பெறச் செய்வது நமது கடமையாக இருக்க வேண்டும் தமிழகத்தில் எப்படிப்பட்ட ஆட்சி நடைபெற்று வருகிறது என்பதை உணர்ந்து செயல்பட்டால் வருகின்ற தேர்தலில் தேசிய ஜனநாயக் கூட்டணி வெற்றியை யாரும் தடுத்து விடமுடியாது என்பதை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் தமிழக அரசினை கண்டித்து நடத்தப்பட்ட தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தின் போது நகர துணைத் தலைவர் முரளி, மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், பாட்டாளி மக்கள் சேர்ந்த மாணிக்கம் , தாமோதரன், மாதவன், மாவட்ட துணைத் தலைவர் மன்னன் சிவா, பொருளாளர் குணசேகர் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியை சார்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்

செய்திகள் : மாருதி – மனோ / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed