கர்நாடகா ஆயுஷ் நிறுவன உதவியுடன், குளோபல்ஸ் ஸ்கூல் ஆப் யோகா சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், 6 வயது முதல் 16 வயதுவரையிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையிலான தனித்திறன் போட்டியினை நடத்தி வருகிறது. 
சேலம் மாவட்டத்தில் இந்த போட்டியானது, சேலம் வாய்க்கால்பட்டறை ஜெய் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. 


இந்த போட்டியில் சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
இதுகுறித்து நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் யோகா மாஸ்டர் மேகலா கண்ணன் கூறுகையில், சேலத்தில் நடைபெற்றுவரும் தனித்திறன் யோகா  போட்டியானது காலை முதல் மதியம் 2 மணி நடைபெறுவதாகவும், பின்னர் மாலையில் பரிசளிப்பு விழாவும் நடக்கிறது என தெரிவித்தார். 


மேலும், மாவட்ட அளவில் வெற்றி பெற்ற முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்கள் வரும் ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள். 
அதேபோல் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் வெற்றிபெறும் முதல் மூன்று இடம் பிடிக்கும் மாணவர்கள் மும்பையில் வரும் நவம்பர் மாதம் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள். தேசிய அளவில் வெற்றிபெறுபவர்கள் சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள் என தெரிவித்தார்.

செய்திகள் : தங்கதுரை / 9442979467/ சேலம் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed