கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பண்ருட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் இங்கு நெல், மணிலா, கம்பு, கேழ்வரகு, எள், பருத்தி உள்ளிட்ட விளைச்சல் அடையும் விவசாய பொருட்களை விற்பனைக் கூடத்திற்கு கொண்டு வருவது வழக்கம்,

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக டிஜிட்டல் முறையில் விவசாயிகளுக்கு பணப்பரிவர்த்தனை செய்யும் நடைமுறையை அரசு கொண்டு வந்தது, இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளுக்கு பண செலுத்துவதில்லை, அதனால், விவசாயிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்து வந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக அமைச்சர் கணேசன் வியாபாரிகள் கோரிக்கை மனு அளித்தனர். இதனால் விவசாயிகள் பெருதும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்
அதன் பேரில் ஒழுங்குமுறை கூடம் அலுவலகத்தில் மாவட்ட வேளாண் வணிக துணை இயக்குனர் பூங்கோதை தலைமையில் சூப்பிரண்ட் ஆனந்த நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் வியாபாரிகள் மற்றும் விவசாயிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்பொழுது விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது இதனை அடுத்து வியாபாரிகள் வைத்த கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் இடமும் துறை அமைச்சரிடமும் தெரிவிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எதிரொலி : 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed