மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதி மக்கள் பட்டா கேட்டு அமைச்சர் மூர்த்தியிடம் மனு; வனத்துறையிடம் ஆட்சேபனை இல்லா சான்றிதழ் பெற்று பட்டா வழங்க அமைச்சர் மூர்த்தி உறுதி,

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் புதிதாக நியாய விலை கடை திறப்பு விழாவில் வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

அப்போது நாகமலை புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் மக்கள், தங்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கும் இந்த வீடுகளைத் தவிர வேறு எங்கும் நிலமோ, வீடோ இல்லை என்றும், தலைமுறை தலைமுறையாக இங்கு வசித்து வருவதாகவும் கடந்த மே மாதம் தமிழக முதலமைச்சர், ஆட்சேபனையற்ற மலைப்புறப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க ஆணையிட்டதைத் தொடர்ந்து, நியாயவிலைக் கடை திறப்பு நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் மூர்த்தியிடம் பொதுமக்கள் கூட்டமாக கூடி மனு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் நில அளவீடு செய்யப்பட்டதாகவும் மக்கள் கூறுகின்றனர். இருப்பினும், வனப்பகுதியிலிருந்து 40 மீட்டர் தொலைவிற்குள் வீடுகள் இருப்பதால் வனத்துறையிடம் ஆட்சேபனை இல்லா சான்றிதழ் பெற்று பட்டா வழங்க முயற்சி எடுக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

முன்னதாக திமுகவின் அழகிரியின் ஆதரவாளராக இருந்த முன்னாள் மதுரை துணை மேயர் பி.எம்.மன்னன் நேற்று அதிமுகவில் இணைந்தது தொடர்பாக செய்தியாளர்கள் மூன்று முறை கேள்வி கேட்டும் அந்த கேள்வியை தவிர்த்து பதில் அளிக்காமல் சென்றார் அமைச்சர் மூர்த்தி.

மதுரை செய்தியாளர் : காளமேகம் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed