சென்னை செல்வதற்காக விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில்;-

DNT (பிரமலைக்கள்ளர் சமுக ) கணக்கெடுப்பு குறித்து பிரதமர் மோடியிடம் கடிதம் அளிக்க உள்ளேன், சுதந்திரப் போராட்ட களத்தில் போராடி பல்வேறு உரிமைகளை இழந்த DNT மக்களுக்காக சலுகை வழங்க கோரி மனு அளிக்க உள்ளேன்.

காங்கிரஸ் இல்லாமல் திமுக அரசமைக்க முடியாது என நிர்மல் குமார் கூறியது குறித்து கேள்விக்கு,

அது அவர்களுடைய கருத்து, என பதிலளித்தார்.

ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை தலைமைக்கு தெரியுமா?

கடந்த 17ஆம் தேதி தலைமையிடம் பேசிவிட்டு தான் வந்தேன்.

செல்வப் பெருந்தலை குறித்த கேள்விக்கு? அண்ணனுக்கும் தம்பிக்கும் பெரிய பிரச்சனை வேறு ஒன்றுமில்லை..

உங்கள் மீது செல்வப் பெருந்தலை புகார் அளிக்கப் போவதாக வந்த தகவல் குறித்து கேள்விக்கு?

அது எல்லாம் இல்லை.. பத்திரிக்கையாளர்கள் இதை பெரிசாக ஆக்க வேண்டாம். அண்ணன் தம்பிகளுக்கு இடையில் ஆனது பிரச்சனை இல்லை அங்க எல்லாம் சகோதரர்கள் ராகுல் காந்தி தலைமையில் கார்கே தலைவராக ஏற்று பலமான கட்சியாக உருவாக்குவதற்காக என்னுடைய முயற்சி.

ஆட்சியில் பங்கில் ராகுல் காந்தி கருத்து என்ன? நீங்கள் தான் கேட்க வேண்டும்.

காலையில் குட் மார்னிங் மெசேஜ் பதிலாக ஒரு பதிவை போட்டேன். பாரதியார் வார்த்தை தப்பான வார்த்தையா அது..?

மாணிக்கம் தாகூர் ராஜினாமா வா என வதந்தி பரவுது குறித்த கேள்வி?

அல்ட்ர சில்ர ஐடி விங் இப்படி தான் செய்யும். கற்பனைக்கு ஒரு எல்லையே இல்லாமல் இருக்கு என்று பதிவு போட்டு உள்ளேன். கரூர் நாடாளுமன்ற உறுப்பினரை தவறாக பார்க்கும் சங்கிகளின் பார்வை தொடர்கிறது. பாஜக மாநிலத் தலைவராக இருக்கக் கூடிய நயினார் நாகேந்திரன் எப்படி பெண்களை பற்றி அவதூறாக பேசினார்களோ அதற்கு வருத்தப்பட்டு இருக்கிறார். மாவட்டத் தலைவர்களுக்கு அந்த வியாதி ஒட்டியுள்ளது. அந்த வியாதியை தீர்க்க வேண்டியது முக்கியமான கடமை காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடுமையான கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜோதி மணியை பொருத்தவரைக்கும் சாதாரண குடும்பத்தில் பிறந்து காங்கிரஸ் கட்சியில் உயர்ந்து எம்.பியாக உள்ளார். அவரைப் பற்றி தவறான பேச்சுக்களை பேசக்கூடிய பாஜக நிர்வாகி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் மோடி அவர்கள் இதற்கு தலையிட வேண்டும். பாஜக உடைய கல்சரையே மாற்றி உள்ளார் நியூ இந்தியா என்று சொல்லி பாஜக நிர்வாகிகள் பெண்களை அவதூறாகவும் அசிங்கமாகவும் பேசுவது கைவந்த கலையாகிவிட்டது. பாஜக, ஆர்எஸ்எஸ் உடைய கல்ச்சர் ஆக மாறிவிட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சியின் முடிவுகள் வருங்காலத்தில் வளர்ச்சிக்காக எடுக்கப் போகிறதா? வெற்றிக்காக எடுக்கப் போகிறதா?

காங்கிரஸ் கட்சி தமிழகத்தின் நன்மைக்காக எடுக்கப் போகிறது. தமிழக மக்களின் நன்மைக்காக போராடுகிறோம். எங்களை பொறுத்த வரைக்கும் தமிழக முதல்வர் கூறியது போல் தமிழ்நாடு vs டெல்லி என்பதைத்தான் போராடுகிறோம். எங்களை பொறுத்த வரைக்கும் நம்பிக்கை உள்ளது இந்த தேர்தலில் தமிழகம் வெற்றி பெறும்.

மதுரை செய்தியாளர் : காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed