ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் , சமூகநலன் , மகளிர் உரிமைத்துறையின் மூலம்
” பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் ” திட்டத்தின் கீழ், குழந்தைகளின் பிறப்பு மகிழ்ச்சியுடன் வரவேற்கப்படும் வகையில் 100 பெண் குழந்தைகளுக்கு குழந்தை பராமரிப்பு பெட்டகம், மரக்கன்றுகள் ,பெண் குழந்தைகளின் பிறப்பு விழாவை கொண்டாடும் வகையில் பாராட்டுச் சான்றிதழ்களை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் நிகழ்ச்சியின் மூலம் பெண் குழந்தைகளின் பிறப்பை ஊக்குவித்தல், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி , உரிமைகளை உறுதி செய்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பெண் குழந்தைகளின் பிறப்பை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது, அவர்களுக்கு சம உரிமை, தரமான கல்வி, சிறந்த சுகாதாரம் , பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்வது ஒவ்வொருவரின் பொறுப்பாகும். பெண் குழந்தைகள் கல்வி , அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் சமூக முன்னேற்றத்தில் பங்கேற்பது என்ற நோக்கில் இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் , ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.செல்வாம்பிகை , சமூகநல பொறுப்பு அலுவலர் ரதிதேவி , செய்தி – மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் இ.சாலி தளபதி உள்பட மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
