தமிழக முதல்வர் அரசு ஊழியர்களை அழைத்து பேசாவிட்டால் டிசம்பர் மாதம் 4ம் தேதி ஒரு லட்சம் அரசு ஊழியர்களை இணைத்து சென்னையில் முதல்வர் ஜோசப் விஜய் அவர்களை சந்திக்க திட்டம் – தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் முடிவு.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு, 45 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 11 முனைகளிலிருந்து ஊழியர் சந்திப்பு பிரச்சார இயக்கம் இன்று தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய அளவில் அரசு ஊழியர்களை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் நவம்பர் 16-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை இந்தப் பிரச்சார இயக்கம் நடத்தப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் அரசு ஊழியர்கள் திரளாகக் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, மாவட்டத்தின் 11 முக்கிய முனைகளிலிருந்து பிரச்சாரக் குழுக்கள் புறப்பட்டுச் சென்றன.


செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் கே. வாசுகி கூறியதாவது,
தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்; அதற்கான முன்னெடுப்புகள் ஏதும் இதுவரை எடுக்கப்படவில்லை. 1-4-2026 முதல் அமல்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் டாப்ஸ் திட்டத்திற்கான புதிய விதிமுறைகளை இதுவரை வெளியிடவில்லை; உரிய விதிமுறைகளையும் செயலாக்க ஆணையையும் உடனடியாக வெளியிட வேண்டும்.
40 ஆண்டு காலமாகப் போராடி வரும் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; காலை சிற்றுண்டித் திட்டத்தையும் அவர்களிடமே வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்கக் காலம் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அரசு அவர்களை வஞ்சிப்பது வருந்தத்தக்கது; அந்த 41 மாதக் காலத்தை பணிநீக்கக் காலமாக வரன்முறை செய்ய வேண்டும்.


5 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் இருக்கும் நிலையில், தனியார் நிறுவனமான ஓ.எம்.சி.எல் மூலம் பணி நியமனம் செய்யும் அரசாணையை ரத்து செய்து, அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் வேலைவாய்ப்புத் துறை மூலமாகவே நேரடிப் பணி நியமனம் செய்ய வேண்டும்.
மேலும், காஞ்சிபுரம் மாவட்டம் காரப்பேட்டையில் உள்ள புற்றுநோu7ய் மருத்துவமனையில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 100 சதவீதம் இலவச சிகிச்சை வழங்கப்படுவதுடன், மருத்துவமனையின் கட்டமைப்பையும் மேம்படுத்த வேண்டும் என பேட்டி அளித்தார்.
தொகுப்பூதியத்தில் பணியாற்றும் எம்.ஆர்.பி. செவிலியர்களுக்கு காலமுறை ஊதியமும் ,வெளிமுகமை மூலம் பணியாற்றும் கணினி உதவியாளர்களை காலமுறை ஊதியத்தில் நியமிக்கவும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் முழுமையான காப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தருவதுடன், நீட் தேர்வை ரத்து செய்யவும் வலியுறுத்தி, தமிழக முதல்வர் அரசு ஊழியர்களை அழைத்து பேசாவிட்டால் டிசம்பர் மாதம் 4ம் தேதி ஒரு லட்சம் அரசு ஊழியர்களை இணைத்து சென்னையில் முதல்வர் ஜோசப் விஜய் அவர்களை சந்திக்க திட்டம் – தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் முடிவு.

நவம்பர் 27-ம் தேதி வரை காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கிராமங்கள் தோறும் சென்று அரசு ஊழியர்களை நேரில் சந்தித்து, இந்தக் கோரிக்கைகளை விளக்கி ஆதரவு திரட்டப்பட உள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பேட்டி . கே.வாசுகி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம். மாநிலத் துணைத்d தலைவர்
செய்திகள் : லக்ஷ்மி காந்தன் / எதிரொலி . இன் / 8939476777

