​
​காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில், ஐப்பசி மாத அஷ்டமியை முன்னிட்டு, லட்சுமி மற்றும் சரஸ்வதி தேவியருடன் இணைந்து, காமாட்சி அம்மன் சகஸ்ர தீப அலங்காரத்தில் காட்சியளித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த நிலையில், அனைவருக்கும் குங்குமப் பிரசாதம் வழங்கப்பட்டது.

​அஷ்டமி நாளில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு தீபங்கள் ஏற்றி வழிபட்டால், தீராத துன்பங்கள் நீங்கி சகல ஐஸ்வர்யங்களும், மன அமைதியும் கிட்டும் என்பது ஐதீகம்.
​அதன் அடிப்படையில் இன்று, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தின் வசந்த மண்டபத்தில் ஆயிரத்து எட்டு தீபங்கள், அதாவது சகஸ்ர தீபங்கள் ஏற்றப்பட்டன. அந்த ஒளிவெள்ளத்தில், காமாட்சி அம்மன், லட்சுமி மற்றும் சரஸ்வதி தேவியருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

முன்னதாக, உற்சவ காமாட்சி மற்றும் லட்சுமி, சரஸ்வதி தேவியர்களுக்கு அழகிய பட்டாடைகள் உடுத்தப்பட்டு, தங்கம் மற்றும் வைர ஆபரணங்கள் சூட்டப்பட்டன. தொடர்ந்து, நறுமணம் மிக்க பல வண்ண மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, முப்பெரும் தேவியரும் சகஸ்ர தீபம் ஏற்றப்பட்ட வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர்.

​அங்கு ரிக், யஜுர், சாம, அதர்வன ஆகிய நான்கு வேத பாராயணங்கள் ஓதப்பட்டன. பின்னர், முப்பெரும் தேவியர்களுக்கும் நவ தீபங்கள் மற்றும் தூப, தீப ஆராதனைகள் காட்டப்பட்டு, மலர்கள் தூவி வழிபாடு நடத்தப்பட்டது.

சுவாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு குங்குமப் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்தச் சகஸ்ர தீப அலங்கார சேவையில், முப்பெரும் தேவியரும் வசந்த மண்டபத்தில் மிக ரம்மியமாகக் காட்சி அளித்தனர்.

செய்திகள் : லக்ஷ்மிகாந்தன் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed