விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மகாராஜபுரம் ரங்காராவ் லயன்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் பல்வேறு நவீன கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி மாணவர்கள் பார்வையாளர்களை வியக்க வைத்தனர்.
வத்திராயிருப்பு மகாராஜபுரம் ரங்காராவ் லயன்ஸ் மெட்ரிக் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் சார்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பள்ளித் தலைவர் சுந்தர்ராஜப் பெருமாள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பள்ளி தாளாளர் விஜயகுமார் தலைமை வகித்தார்.
பள்ளிப் பொருளாளர் டாக்டர் பால்ச்சாமி, பள்ளித் துணைத் தலைவர் ஆரியன் மதுரம் முன்னிலை வசித்தனர். பள்ளி முதல்வர் சீனிவாசகம் வரவேற்றார். இணைச் செயலாளர் கூடலிங்கம் அரிமா சங்க உறுப்பினர்கள் அறிவொளி முருகன், பொன்சுப்புராஜ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி கண்காட்சியை துவக்கி வைத்தனர்.

இதில் 300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பல்வேறு அறிவியல் படைப்புகள் மற்றும் மாதிரிகளைச் செய்து காட்சிப்படுத்தினார்கள்.
வாகனத்தை ஓட்டும் போது தூக்கத்தைக் கண்டறியும் கருவி , மழைநீர் சேகரிப்பு , சூரிய ஆற்றல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு , காற்றாலை மின்சாரம் , மனித உடல் அமைப்பு , மற்றும் மனிதர்களை வரவேற்கும் ரோபோட் போன்ற பல்வேறு நவீன புதுமையான கண்டுபிடிப்புகளை மாணவர்கள் காட்சிப்படுத்தி பார்வையாளர்களை வியக்க வைத்தனர். பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கண்காட்சியை பார்வையிட்டு மாணவர்களின் திறமைகளைப் பாராட்டினர்.
மிகச் சிறப்பான படைப்புகளை காட்சிப்படுத்திய மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. பங்கேற்ற. அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பள்ளி முதல்வர் ஆசிரியர்கள் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர்.
செய்திகள் : தேவதர்ஷினி / எதிரொலி . இன் / 8939476777

