தமிழக அரசு சார்பாக அரசு மருத்துவமனைகளில் 52,000 குழந்தைகள் எடை குறைவாக பிறந்து கண்காணிப்பில் இருக்கும் நிலையில், அந்த குழந்தைகளுக்கு பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்பு பெட்டகம் வழங்கும் திட்டத்தை அமைக்க மருத்துவம் (ம) மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் நேற்று (13.02.2026-ல்) சென்னையில் துவக்கி வைத்தார்கள்.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இரண்டு (2 kg) கிலோவுக்கும் கீழ் எடை குறைவாக பிறந்து (Admitted) உள் அனுமதியில் உள்ள மருத்துவ பயனார்களாக உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கும் தொடர் கண்காணிப்பிற்கும் இரும்புச்சத்து சொட்டு மருந்து, விட்டமின் பி3 மற்றும் மல்டி விட்டமின் சொட்டு மருந்துகள் அடங்கிய பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்பு பெட்டகம் 14.02.2026 ம் நாளன்று மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல வார்டில் இன்று வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, தலைமையேற்று முதல்வர் மரு.க.சத்யபாமா அவர்கள், குழந்தைகள் பாதுகாப்பு பெட்டகத்தினை 20 க்கும் மேற்பட்ட மருத்துவ பயனார்களுக்கு வழங்கினார். இப் பெட்டகத்தில் உள்ள ஊட்டசத்து சொட்டு மருந்துகளை குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்கள் கூறும் அறிவுரைகளின் படி அவர்கள் தெரிவிக்கும் அளவு மருந்து மட்டுமே குழந்தைகளுக்கு வழங்கிட வேண்டும், கூடுதலாக வழங்கி விட்டால் குழந்தைகளுக்கு உடல் நலன் பாதிக்கப்படும், ஊட்ட சத்து மருத்து தானே என குழந்தை வளர்ச்சிக்காக கூடுதலான அளவு சொட்டு மருந்து எக்காரணம் கொண்டும் வழங்க கூடாது எனவும் தெரிவித்தார்கள்.

மேலும், இது குறித்து மகப்பேறு சிகிச்சை பெற்ற மருத்துவ பயனார்கள் / உடனாளர்கள், பொது மக்கள் அனைவருக்கும் இத்திடத்தின் பயன்களை அறிவுறுத்தியதோடு இக்குழந்தை பாதுகாப்பு பெட்டகம் 2 கிலோவிற்கும் குறைவாக பிறந்த குழந்தைகளுக்கு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் தாய் சேய் மருத்துவ நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவ கல்லூரி (ம) மருத்துவமனைகளில் கிடைக்கும் என தெரிவித்தார்.

இந் நிகழ்வில், மருத்துவ கண்காணிப்பாளர் மரு. P.சந்திரசேகரன் MD.,DM (Neuro) உள்ளிருப்பு மருத்துவ அலுவலர்கள் மரு.எம்.செல்வராஜ், மரு. மது, மரு.கிருபாவதி, மகப்பேறு இயல் பேராசிரியர் மரு.பத்மலதா, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ இணை பேராசிரியர் மரு.கவிதா, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்கள் நாகராஜ், சிவராஜ் முரளிதரன், ஜெயஸ்ரீ ராமகிருஷ்ணன், மகப்பேறு பிரிவு மருத்துவர்கள் செவிலியர் கண்காணிப்பாளர் சரளா மாதவி, செவிலியர்கள் கோகிலா, சுலோச்சனா, தமிழரசி உள்ளிட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
நிறைவாக நிர்வாக அலுவலர் S.K.சரவணன் நன்றி கூறினார்.

கிருஷ்ணகிரி செய்தியாளர் : மாருதி – மனோ எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed