தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடந்த பத்தாம் தேதி முதல் கந்த சஷ்டி பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியாக சூரசம்ஹார விழா இன்று நடைபெறுவதால் இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

சூரசம்ஹார விழா நடைபெறும் இன்று கோவிலில் பக்தர்கள் மாவிளக்கு வைத்து விளக்கேற்றி வழிபாடு செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர். சென்னை, கோவை திருச்சி, விருதுநகர், திருமங்கலம், சோழவந்தான் ,உசிலம்பட்டி, மேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் சன்னதி தெருவில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோவிலின் இன்று சூரசம்ஹாரம் நடைபெறுவதால் அதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
மேலும். கோவிலில் தங்கி விரதம் இருந்த பக்தர்கள் சூரசம்ஹார விழாவிற்கு பின் தங்களது கந்த சஷ்டி விரதத்தை இன்று நிறைவு செய்வார்கள் .


செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777
