முன்னதாக பல வண்ண ஆடைகளில் பட்டாம் பூச்சிகளாய் பறந்து வந்த பள்ளிக் குழந்தைகள் கலந்து கொண்ட, காலை இறைவணக்கக் கூட்டத்தில் தேசியகொடி ஏற்றி வைக்கப்பட்டு குழந்தைகள் நாள் விழாவின் சிறப்புகள் எடுத்துரைக்கப்பட்டது.

தொடர்ந்து குழந்தைகளுக்கான சிறப்பு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் குழந்தைகள் மிகவும் விரும்பி பங்கேற்ற 11 வகையான விளையாட்டுகள் இடம் பெற்றது. பிற்பகல் பள்ளித்தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளி மாணவர்கள். குழந்தைகள் நாள் விழா தொடர்பான கவிதை, பேச்சு மூலம் தமது திறமைகளை வெளிப்படுத்தினர். பின்னர் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியாக தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்ட கேக் மற்றும் குழந்தைகள் நாள் வாழ்த்து அட்டைகள் மற்றும் இனிப்பு ஆகியன வழங்கப்பட்டது.

நிகழ்வில் உதவி ஆசிரியர்கள் சோ. சிவகுருநாதன், கோ. ஆனந்தன், மா. அனிதா, ச. மரகதம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்திகள் : மாருதி மனோ / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed