கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் (கோவை) இரண்டாம் ஆண்டு பயின்று வரும் மாணவர் ரெ. திலக் மற்றும் உதயா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் மாணவி ஜெ.எம். ஜெனிபா ஆகிய இருவரும் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான கூடோ (KUDO) போட்டியில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் (Ministry of Youth Affairs) மற்றும் இந்திய அரசு இணைந்து நடத்தும் இப்போட்டிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள வீர சாவர்க்கர் விளையாட்டு அரங்கில் நவம்பர் 12-ஆம் தேதி முதல் நவம்பர் 19-ஆம் தேதி வரை நடைபெற்று வருகின்றன.

இப்போட்டியில் பங்கேற்கத் தேர்வான இரு மாணவர்களும் கன்னியாகுமரி மாவட்ட பயிற்சியாளர் தாணு குளத்தூரான் தலைமையில், மாவட்ட விளையாட்டு அலுவலர், பெற்றோர்கள் மற்றும் பெரியோர்களின் வாழ்த்துகளும் ஆசீர்வாதங்களும் பெற்று போட்டியில் பங்கேற்க அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஏற்கனவே பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளைப் பெற்று, இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ள இம்மாணவர்கள், இப்போட்டியிலும் சிறப்பாக விளையாடி பதக்கங்களை வென்று சாதனை படைக்க வேண்டும் என விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

செய்திகள் : சுரேஷ் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed